வலிவடக்கு மக்கள் கண்ணீரில்! கூட்டமைப்பு கேக் வெட்டி கொண்டாட்டம்

received_1103568846367237

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்புடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் மீள்குடியேற அனுமதி கிடைக்காது வலிவடக்கு, மயிலிட்டி மக்கள் ஏமாற்றத்துடன் ஜனாதிபதி பதில் தருவார் என காத்திருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.received_1103568783033910
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் பிறந்த நாள் இன்று யாழில் கொண்டாடப்பட்ட போது அதில் ஜனாதிபதி மைத்திரியும் கலந்து கொண்டுள்ளார். அவருடன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.received_1103568846367237
ஏற்கனவே, மயிலட்டி விடிவிக்காவிடின் போராட்டம் வெடிக்கும் என கூறிய மாவை மைத்திரியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஆனால் மயிலிட்டி மக்கள் தமது காணியை ஜனாதிபதி விடுவிப்பார் எனவும், வலிவடக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்வார் எனவும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது பற்றி ஜனாதிபதி எதுவும் பேசாத நிலையில் கூட்டமைப்பினர் அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளமை பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila