மீண்டும் தொடங்கியது சுமந்திரன் அணியின் சதி!

deth

வடமாகாண முதலமைச்சரிற்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவர சுமந்திரன் அணி மீண்டும் தயாராகியுள்ளது.இது தொடர்பான இரகசியக்கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை கொக்குவில் தலையாளி பகுதியிலுள்ள விடுதியொன்றினில் மதுபானப்பாட்டியொன்றுடன் ஆரம்பமாகியுள்ளது.
முதலமைச்சரிற்கு எதிரான சதியினில் முதலில் ஈடுபட்டு மூக்குடைபட்ட சயந்தன்,ஆனோல்ட் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் கொண்ட கும்பலே இன்று மதுபான விருந்துபசாரத்துடன் மீண்டும் சதி முயற்சியினில் களமிறங்கியுள்ளது.
இன்று நாள் முதலும் தொடர் மழை யாழ்ப்பாணத்தினை புரட்டியடித்துக்கொண்டிருந்த போதிலும் மதுபான விருந்துபசாரம் நடைபெற்றதாகவும் ஏற்கனவே யு.எஸ்.ஹோட்டல் சதிகள் ஊடகங்களினில் அம்பலமானதால் இடத்தை இரகசியமாக கொக்குவில் பகுதிக்கு மாற்றியிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
deth
இதனிடையே வடமராட்சி கிழக்கில் தனியார் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை நிறுவ, வடமாகாணசபை உறுப்பினர்களை கொண்டு இரகசிய முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான இரகசிய சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்தது. வடமாகாணசபையின் எட்டு உறுப்பினர்களும், சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ முயலும் ராஜன் சுந்தரம் பிள்ளையும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
தனியார் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவ முடியாதென அண்மையில் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ராஜன் சுந்தரம்பிள்ளை வடக்கு மாகாணசபை உறுப்பனர் ஒருவர் ஊடாக இந்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இதன்ஒரு கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை மாகாணசபை உறுப்பினர்களிற்கிடையில் இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்ட எழுவர்; முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டவர்களே.
lo1
தனியார் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஒருங்கிணைப்புகுழு அனுமதிக்க வேண்டுமென மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதே இந்த குழுவின் நோக்கமாகும். தனியார் திட்டத்தை ஏற்க முடியாதென ஏற்கனவே ஒருஙகிணைப்புகுழு கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், மாகாணசபைக்குள் அதற்கு எதிராக பிரேரணை கொண்டுவந்து முதலமைச்சருக்கு எதிரான இரண்டாம் கட்ட போரை முன்னெடுப்பதே இதன் உள்நோக்கமென சொல்லப்படுகின்றது.
கடன்களால் சிறு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக தற்கொலைகள் ஒருபுறம்,மற்றுபுறம் மீண்டும் துப்பரிக்கி கொலைகள் .அதனை தாண்டி அரசியல் சுயநலத்துடன் செயற்படும் இவர்கள் மனிதர்களா அல்லது மாடுகளாவென கேள்வி எழுந்துள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila