தேவைப்பாட்டை உணர்த்தியிருக்கும் தேசிய கொடி விவகாரம்


தேசியக் கொடி என்­பது சிங்­கள மக்­களை மாத்­தி­ரமே
பிர­தி­ப­லிக்­கின்­றது. அவர்­களின் மத கலை கலா­சா­ரங்­களை மேலோங்­கிய நிலையில் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றது என்­பது தமிழ் மக்­களின் நிலைப்­பாடு. பேரி­ன­வாத சிந்­த­னையின் வெளிப்­பா­டாக அமைந்­துள்ள தேசியக் கொடியை ஏற்­று­வ­தில்லை என்ற கொள்கை பல தசாப்­தங்­க­ளா­கவே தமிழ் தேசிய உணர்­வு­மிக்க அர­சி­யல்­வா­தி­க­ளினால் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது

தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என தெரி­வித்து, வட­மா­காண கல்வி அமைச்சர் கந்­தையா சர்­வேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக விமர்­ச­னங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன. அதே­நேரம், அவ­ரு­டைய அந்த செயற்­பாட்டை நியா­யப்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களும் வந்­தி­ருந்­தன.

தேசிய கொடியை ஏற்ற மறுத்தார் என்­பது சர்­வேஸ்­வரன் மீதான குற்­றச்­சாட்­டாகும். அது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட விமர்­ச­னங்­களில் அர­சியல் வக்­கிரத் தன்­மை­யையும், சிங்­கள பௌத்த அர­சியல் போக்கின் ஆதிக்­கத்­தையும் தெளி­வாகக் காண முடிந்­தது. அது மட்­டு­மல்­லாமல் தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் அர­சியல் குரோதப் போக்­கையும் அந்த விமர்­ச­னங்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

வவு­னியா பரக்கும் மகா­வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற அந்தச் சம்­பவம் சாதா­ர­ண­மான ஒன்றாகும். அதனை ஏன் இந்த அள­வுக்குப் பெரி­து­ப­டுத்­தி­யி­ருக்­கின்்­றார்கள் என்ற ஆதங்­கத்­தோடு சிலர் வின­வி­யி­ருந்­த­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.

இன்­னொரு புறத்தில் இந்தச் சம்­பவம், பலரை, தேசிய கொடி மீது, கவனம் செலுத்தி அக்­கறை கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் உள்­ள­டக்­கிய வகையில் தேசியக் கொடி மாற்றி அமைக்­கப்­பட வேண்டும் என்ற சிந்­த­னை­யையும், சில அர­சியல் தலை­வர்­க­ளி­டத்­திலும் மக்கள் மத்­தி­யிலும்,ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இவ்­வாறு பல­ரையும் பல கோணங்­களில் இழுத்துச் சென்று முக்­கி­யத்­துவம் பெற்­றுள்ள 'அந்த தேசிய கொடி­யேற்றல் சம்­பவம் பற்­றிய சரி­யான தக­வல்கள் வெளி­யா­கி­ய­தாகத் தெரி­ய­வில்லை. அதே­வேளை, இந்தச் சம்­ப­வத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து அதனை ஊட­கங்­களில் பெரி­தாக்க வேண்டும் என்ற நோக்­கத்தில் சிலர் செயற்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்­றனர்.

என்ன நடந்­தது?

வவு­னியா நக­ருக்குத் தெற்கே சில கிலோ மீற்றர் தொலைவில், ஏ 9 வீதியில் புற­நகர்க் கிரா­ம­மாக அமைந்­துள்ள ஈரப்­பெ­ரி­ய­குளம் பரக்கும் மகா­வித்­தி­யா­ல­யத்தில் வச­தி­யற்ற மாண­வர்­க­ளுக்கு சைக்­கிள்கள் வழங்கும் ஒரு நிகழ்வு பாட­சாலை நிர்­வா­கத்­தினால் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதில் பிர­தம விருந்­தி­ன­ராக வட­மா­காண கல்வி அமைச்சர் சர்­வேஸ்­வரன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். வவு­னியா மாவட்ட வட­மா­காண சபை உறுப்­பினர் ஜய­தி­லக்­கவின் குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதியில் இருந்து அந்தப் பாட­சா­லையில் கல்வி கற்கும் வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த மாண­வர்கள் சில­ருக்கு துவிச்­சக்­கர வண்­டிகள் வழங்­கு­வ­தற்­காக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிகழ்வின் ஆரம்­பத்தில் பௌத்த விகா­ரையில் பிரார்த்­தனை நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்­ட­போது ஏனையோர் காலில் சப்­பாத்­துக்­க­ளு­டனும் செருப்­புக்­க­ளு­டனும் மலர்கள் வைத்து வணங்­கிய போதிலும், தான் இந்து ஆல­யத்தில் வணங்கும் முறைக்­க­மைய செருப்­புக்­களைக் கழட்­டி­விட்டு உள்ளே சென்று வணங்­கி­ய­தாக அமைச்சர் சர்­வேஸ்­வரன் கூறினார்.

அதன் பின்னர் ஆரம்­ப­மா­கிய மண்­டப நிகழ்­வுக்கு முன்­ன­தாக கொடி­யேற்றும் நிகழ்வில், தேசியக் கொடியை ஏற்றி வைக்­கு­மாறு அமைச்சர் சர்­வேஸ்­வரன் அழைக்­கப்­பட்டார். அதன்­போது நீங்கள் செய்­யுங்கள் - 'யு கெரி ஒன் ' என்று சர்­வேஸ்­வரன் கூறி­யுள்ளார். அத­னை­ய­டுத்து இந்த நிகழ்வில் முக்­கிய விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்­டி­ருந்த வவு­னியா தெற்கு வலயக் கல்விப் பணிப்­பாளர் மு.இரா­தா­கி­ருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்­வுகள் தொடர்ந்து இடம்­பெற்­றன.

வட­மா­காண கல்வி அமைச்சர் சர்­வேஸ்­வரன் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்குப் பின்­ன­டித்த போதிலும், அல்­லது தேசியக் கொடியை ஏற்­று­வ­தற்கு மறுப்பு தெரி­வித்த போதிலும் அவ்வி­டத்தில் தர்க்கம் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. நிகழ்­வுகள் தொடர்ந்து அமை­தி­யா­கவும் சுமு­க­மா­கவும் நடை­பெற்று முடிந்­தன.

ஆனால், தேசியக் கொடியை ஏற்றி வைக்­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுத்­தது, அதற்கு அவர் மறுப்பு தெரி­வித்­தது எல்­லா­வற்­றி­னதும் வீடியோ படப்­ப­தி­வுகள் உட­ன­டி­யாக பெரும்­பான்மை இன தொலைக்­காட்சிச் சேவை­களில் தமிழ் மற்­றும்­ முக்­கிய செய்­தி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து, நாட்டின் தென்­ப­கு­தியில் அது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. தொடர்ந்து அந்தச் செய்தி தமிழ் ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­கி­யது. விமர்­ச­னங்­களும் எழுந்­தன.

விமர்­ச­னங்கள்

அர­சி­ய­ல­மைப்பை ஏற்று அதற்கு அமை­வாக நடப்­ப­தா­கவும், அதனைப் பாது­காப்­ப­தா­கவும் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்த வட­மா­காண அமைச்சர் சர்­வேஸ்­வரன், தேசியக் கொடியை ஏற்ற மறுத்­துள்­ளதன் மூலம் அந்த சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தை மீறி­யுள்ளார் என்று விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. கல்வி இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­ கி­ருஷ்ணனே சர்­வேஸ்­வ­ரனின் செய்­கையை விமர்­சித்­தி­ருந்தார். கண்­டிக்­கத்­தக்க வகையில் அவ­ரு­டைய கருத்து அமைந்­தி­ருந்­தது. தொடர்ந்து பாராளு­மன்­றத்தில் இந்த விடயம் விவ­கா­ர­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

தேசியக் கொடியை ஏற்ற மறுத்­ததன் மூலம், வடக்கில் இன­வாத மனோ­நிலை வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற புதிய கண்டுபி­டிப்பை ஜே.வி.பி. வெளி­யிட்­டி­ருந்­தது. அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இன்னும் ஒரு படி மேலே சென்று வடக்கில் சர்­வேஸ்­வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்­துள்ள அதே­வேளை வட­மா­காண முத­ல­மைச்சர் இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்ற சூழலில் எவ்­வாறு மத்­தியில் உள்ள அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிக்க முடியும் என வின­வி­யி­ருக்­கின்றார்.

அதே­வேளை, இந்தச் சம்­பவம் நடந்­தி­ருக்கக் கூடாது என்ற வகையில் கருத்து வெளி­யிட்­டுள்ள வட­மா­காண முத­ல­மைச்சர், தனது எதிர்ப்பை வேறு­வ­ழி­களில் சர்­வேஸ்­வரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என குறிப்­பிட்­டுள்ளார். தேசியக் கொடியை ஏற்­றுக்­கொள்­ளாத கார­ணத்­தி­னா­லேயே தேசிய சுதந்­திர தின வைப­வங்­களைத் தவிர்த்து வரு­வ­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

முத­ல­மைச்­ச­ரு­டைய கருத்­தின்­படி, வேறு வழி­களில் சர்­வேஸ்­வரன் தேசியக் கொடி­யேற்­று­வதைத் தவிர்த்­தி­ருக்கலாம் - தாம­த­மாக அந்த நிகழ்­வுக்குச் செல்­வதன் மூலம் அதனைத் தவிர்த்­தி­ருக்­கலாம். அல்­லது அந்த நிகழ்­வையே தவிர்த்­தி­ருக்­கலாம் என ஆலோ­சனை கூறு­வோரும் இல்­லாமல் இல்லை. எது எப்­ப­டி­யா­னாலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சேர்ந்த வட­மா­காண அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்ற முடி­யாது என மறுத்­து­விட்டார் என்­பது பாராளு­மன்றம் வரையில் சென்று பல்­வேறு தரப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் தமக்குத் தெரிந்த அளவில் அது­பற்­றிய கருத்­துக்­களை வெளி­யிடச் செய்­து­விட்­டது.

விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால்....

பல­த­ரப்­பட்ட விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால், தேசியக் கொடியை ஏற்ற மறுத்த சம்­ப­வ­மா­னது வெளிப்­ப­டுத்­தி­யுள்ள அர­சியல் மற்றும் அடிப்­படை உரிமை நிலை­மைகள் என்ன என்­பது முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­வாக சத்­தியப் பிர­மாணம் செய்­துள்ள அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்­தி­ருப்­பது, அர­சி­ய­ல­மைப்பு விதி­களை மீறி­ய­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இங்கு அர­சி­ய­ல­மைப்­பிற்கு அமை­வாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­வது என்­பது, தேசியக் கொடியை மறுப்பு தெரி­விக்­காமல் ஏற்­றுவேன் என அவர் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­தாரா என்­பது கேள்­வி­யா­கின்­றது. அவர் செய்த சத்­தி­யப்­பி­ர­மாணம் அல்­லது, அமைச்­சர்­களோ பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடக்கம் மாகாண சபைகள், பிர­தேச சபைகள் உள்­ளிட்ட உள்­ளு­ராட்சி சபை­களின் உறுப்­பி­னர்கள் தமது பத­வி­யேற்­பின்­போது, செய்­கின்ற சத்­தி­யப்­பி­ர­மாணம் என்ன என்­பது முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது.

ஆறா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களே முக்­கி­யத்­துவம் மிக்­க­வை­யாக நோக்­கப்­ப­டு­கின்­றன. ஆறா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் கீழான சத்­தி­யப்­பி­ர­மாணம் சொல்­வ­தென்ன?

ஏதா­வது அர­சியல் கட்சி அல்­லது ஏதா­வது ஓர் அமைப்பு இலங்­கைக்குள் ஒரு தனி­நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான இலக்கை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருப்­பதை ஆறா­வது திருத்தச் சட்டம் தடை­செய்­துள்­ளது. அது மட்­டு­மல்­லாமல் யாரா­வது தனி நபர் ஒருவர் இலங்­கைக்­குள்­ளேயோ அல்­லது இலங்­கைக்கு வெளி­யிலோ, இலங்­கைக்குள் தனி­நாடு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான நிதி­யு­த­வியை வழங்கி ஊக்­கு­விக்­கவோ, அதற்கு ஆத­ர­வாகப் பிர­சாரம் செய்­யவோ அல்­லது சாதா­ர­ண­மான நிலையில் அத்­த­கைய செயற்­பாட்­டிற்கு ஊக்­க­ம­ளிப்­ப­தையோ, உத­வு­வ­தையோ அந்தச் சட்டம் தடை­செய்­துள்­ளது. நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மாக இத்­த­கைய செயற்­பா­டு­களில் எவரும் ஈடு­படக் கூடாது என்­ப­தையும் அது தடை செய்­கின்­றது.

அடிப்­படை உரிமை மறுப்பு

ஆறா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­ட­மா­னது தமிழ் மக்­களின் அடிப்­படை உரி­மை­களை அப்­பட்­ட­மாக மீறு­கின்ற ஒரு சட்­ட­மாக மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­க­ளி­னாலும், துறை­தோய்ந்த அர­சியல் நிபு­ணர்­க­ளி­னாலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

மாறி மாறி ஆட்­சிக்கு வந்த பேரி­ன­வாத அர­சாங்­கங்­களின் செயற்­பா­டு­க­ளினால், இந்த நாட்டின் தேசிய சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்கள் தங்­க­ளு­டைய அர­சியல் நிலைப்­பாட்டைத் தீர்­மா­னிக்­கின்ற சுய­நிர்­ணய உரி­மையை, ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான தன்­மை­களைக் கொண்­டுள்ள இந்தச் சட்டம் தடுத்­துள்­ளது. இதனால் அந்த மக்கள் எண்­ணி­ல­டங்­காத வகையில் கஷ்­டங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் அனு­ப­வித்­துள்­ளார்கள். இன்னும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சாச­னத்தை நிறை­வேற்­று­வ­தா­கவும், அதனைக் கடைப்­பி­டிப்­ப­தா­கவும் இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. எல்லா மக்­க­ளுக்கும் சுய­நிர்­ணய உரிமை உண்டு என்­பதை அந்த சாசனம் வலி­யு­றுத்­து­கின்­றது. தமது சமூக, பொரு­ளா­தார, கலை, கலா­சார செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய தங்­க­ளு­டைய அர­சியல் நிலை­மையத் தீர்­மா­னிக்­கின்ற உரிமை அவர்­க­ளுக்கு இருக்­கின்­றது என்­ப­தையும் அது சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

அந்த வகையில் சுய­நிர்­ணய உரிமை என்­பது எல்லா மக்­க­ளி­னதும் அடிப்­படை உரி­மை­யாகும். ஆனால், ஐ.நா. சாச­னத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அடிப்­படை உரி­மையை மீறும் வகையில் அந்த உரி­மையை மறுக்கும் வகை­யி­லேயே இலங்­கையின் ஆறா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அந்தச் சட்­டத்தின் கீழ் தனி­நாடு உரு­வாக்­கத்­திற்கு துணை­போக மாட்டேன் என சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்த அமைச்சர் ஒரு­வரே, தேசிய கொடியை ஏற்ற மறுத்­ததன் மூலம் அர­சி­ய­ல­மைப்பை மீறியி­ருக்­கின்றார் என்று குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கின்றார்.

தனி­நாடு குறித்த சந்­தேகம்

இலங்­கையைப் பொறுத்த மட்டில் கடந்த ஆறு தசாப்­தங்­க­ளாக இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டாமல் புரை­யோ­டி­யுள்ள அர­சியல் பின்­ன­ணியில் இந்தச் சத்­தி­யப்­பி­ர­மா­ணமே முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. அதா­வது அர­சியல் உரி­மைக்­காக ஏங்கும் நிலையில் அதற்­கான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ள தமிழ் மக்­களும், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் தங்­க­ளுக்­கான தனி­நாடு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் எந்த வேளை­யிலும் ஈடு­ப­டலாம் - முயற்­சிக்­கலாம் என்ற சந்­தேகம் சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் வலு­வாக நில­வு­கின்­றது.

இந்த சந்­தே­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தேசிய கொடியை ஏற்ற மறுத்த சம்­பவம் சிங்­களத் தரப்பு அர­சி­யல்­வா­தி­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்­றது. சிங்­கள அர­சி­யல்­வா­திகள் மட்­டு­மல்­லாமல், வட­மா­காண ஆளுநர் போன்ற அரச தரப்­பின அர­சியல் சார்ந்த உயர்­நிலை அதி­கா­ரி­களும் இந்த மாயைக்குள் சிக்­குண்டு கிடக்­கின்­றார்கள்.

தேசிய கொடி என்­பது சிங்­கள மக்­களை மாத்­தி­ரமே பிர­தி­ப­லிக்­கின்­றது. அவர்­களின் மத கலை கலா­சா­ரங்­களை மேலோங்­கிய நிலையில் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றது என்­பது தமிழ் மக்­களின் நிலைப்­பாடு. பேரி­ன­வாத சிந்­த­னையின் வெளிப்­பா­டாக அமைந்­துள்ள தேசியக் கொடியை ஏற்­று­வ­தில்லை என்ற கொள்கை பல தசாப்­தங்­க­ளா­கவே தமிழ் தேசிய உணர்­வு­மிக்க அர­சி­யல்­வா­தி­க­ளினால் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அஹிம்சை ரீதியில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்த மித­வாதத் தலை­வர்­களும் அதே­போன்று அஹிம்சை போராட்­டங்­களில் நம்­பிக்கை இழந்து, ஆயு­த­மேந்தி போரா­டிய இளம் தலை­மு­றையைச் சேர்ந்­த­வர்­களும் இந்தக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து வந்­துள்­ளார்கள். இன்னும் கடைப்­பி­டித்து வரு­கின்­றார்கள்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் சர்­வேஸ்­வரன் தேசிய கொடியை ஏற்­றாமல் அந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த ஏனை­ய­வர்­களில் யாரா­வது ஒரு­வரை தேசிய கொடியை ஏற்­று­மாறு கூறி­விட்டு ஒதுங்­கி­யி­ருந்தார். இவ்­வாறு ஒதுங்­கி­யி­ருந்­த­தையே அவர் அர­சி­ய­ல­மைப்பை மீறி­விட்டார். தேசிய கொடியை அவ­ம­தித்­து­விட்டார் என்று பலரும் வியாக்­கி­யானம் செய்­துள்­ளார்கள்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் தேசிய கொடி விவ­காரம் இடம்­பெ­றுமா?

தேசிய கொடிக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற ஈரப்­பெ­ரிய குளம் பரக்கும் மகா­வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற சம்­ப­வத்தில் வட­மா­காண அமைச்சர் சர்­வேஸ்­வரன், தேசிய கொடியை உங்­களில் யாரா­வது ஒருவர் ஏற்­றுங்கள் எனக் கூறி ஒதுங்­கி­யி­ருந்­தாரே தவிர, தேசிய கொடியை அவ­ம­திக்கும் வகையில் அவர் எந்­த­வி­த­மான செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. இதனை அந்த நிகழ்வில் நேர­டி­யாகக் கலந்து கொண்­டி­ருந்த அனை­வரும் அறி­வார்கள். 

அங்கு வீடி­யோவில் பதிவு செய்­யப்­பட்ட காட்­சி­களும் தேசிய கொடிக்கு இழுக்கு ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ அல்­லது அதனை அவ­ம­திக்கும் வகை­யிலோ அவர் செயற்­ப­ட­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. ஆயினும், அவர் அந்த இடத்­தை­விட்டு அக­லாமல், அமை­தி­யாக ஏனை­யோ­ருடன் பிர­சன்­ன­மாக இருந்­ததன் மூலம் தேசிய கொடிக்கு கௌர­வ­ம­ளித்­துள்ளார் என்றே கூற வேண்டும். தேசிய கொடியை அவர் மன­மு­வந்து ஏற்­று­வ­தற்கு முன்­வ­ர­வில்­லையே ஒழிய, அதற்­கு­ரிய மரி­யா­தை­யையும் கௌர­வத்­தையும் அவர் அளித்­துள்ளார் என்­பது இதில் இருந்து தெளி­வா­கின்­றது.

தேசிய கொடி குறித்த தமி­ழர்­களின் அர­சியல் நிலைப்­பாடு சிங்­கள மக்கள் கொண்­டுள்ள உணர்­வுக்கு மாறா­னது. தேசிய கொடியில் இந்த நாட்டின் மற்­று­மொரு தேசிய இன­மா­கிய தமிழ் மக்கள் அர­சியல் ரீதி­யா­கவும், கலை கலா­சார ரீதி­யா­கவும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற மனக்குறை நீண்ட காலமாகவே நிலவுகின்றது.

இத்தகைய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன்வராமல் வேறு யாராவது ஒருவரை அதனைச் செய்யுமாறு சர்வேஸ்வரன் கூறியிருந்தார். இதனை விமர்சித்தவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஒருவர். சர்வேஸ் வரனின் நடத்தையானது, போலித் தேசியத்தின் வெளிப்பாடு என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழ்த்தேசியம் என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. ஆயுதப் போராட்ட வழி வந்தவர்களைப் பொறுத்தமட்டில், இந்த உணர்வானது, மண்வாசனையுடன் கூடியது. வடக்கு, கிழக்குத் தாயகம் என்ற அடிப் படையில் அந்தப் பிரதேசத்தின் காடு மேடு, வயல்கள், கிராமங்கள் நகரங்கள் என பரந்த அளவில் அவற்றின் புழுதியிலும் சேற்றிலும் பற்றிப் பிணைந்தது. அத்துடன் அது தொப்புள் கொடி உறவு என கூறப்படுகின்ற தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுடனும் தொடர்புபட்டு உயிர்த்திருப்பது. அதன் பின்னணியிலேயே தமிழ் மக்களின் நலன்களில் அல்லது அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டிராத தேசிய கொடியை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு சம்பவமாக ஈரப்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் நடந்தேறியிருக்கின்றது.

இந்தச்சம்பவம் ஊதிப் பெருப்பிக்கப் பட்டுள்ளதையடுத்து, இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில் நடைமுறையில் உள்ள தேசிய கொடியை சகல மக்களுக்கும் உரிய தாக, சகல மக்களும் உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் வடிவமை க்க வேண்டியது அவசியம் என்ற தேவைப் பாட்டை உணர்த்தியிருக்கின்றது. எனவே, உரியவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கவனம் செலுத்துவார்களா?

பி.மாணிக்­க­வா­சகம்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila