வலி.வடக்கு வசாவிளான் கிராமத்தின் 29 ஏக்கர் காணி இராணுவத்தால் விடுவிப்பு


இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக் குப் பிரதேசத்தின வசாவிளான் கிராமத்தின் ஜேஃ245 கிராம சேவ கர் பகுதிக்கு உட்பட்ட 29 ஏக்கர் நிலப் பகுதி நேற்று இராணுவத் தினரால் விடுவிக்கப்படுள்ளது. 
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிக்குள் வசாவிளான்உத்தரமாதா தேவாலயம், ஜடுயனல ழக ஆழரவெ ஊயசஅநட ஊhரசஉh ஸ வசாவிளான் வட மூலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்பனவும் விடுவிக்கப்பட்டுள்ளன. 

இந்த விடுவிப்பு நிகழ்வில் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளை தளபதி தர்சன ஹெட் டியாராய்ச்சி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், பாதிரியார்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டி ருந்தனர். குறித்த தேவாலயம் மற்றும் பாடசாலை என்பன இடிந்துள்ள நிலையில் தற்போது காணப்படுவதால் உடனடியாக அவற்றை மீள செயற்படுத்த முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு செல்வ தற்கு சிறிய அளவுடைய பாதையின் ஊடா கவே செல்ல வேண்டி இருப்பதாகவும், அவர் கள் தெரிவித்திருந்தனர். விடுவிக்கப்பட்ட காணிகளில் அநேகமானவை ஒரு பகுதி விடுவிக்கப்பட்டும் மறுபகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளதால் தம்மால் அங்கு மீள்குடியமர முடியாது எனவும் அப்பகுதி மக் கள் கூறுகின்றனர். எனினும் வசாவிளான் கிராமத்தின் அனைத்து இடங்களும் விடுவி க்கப்படும் என்ற ஆவலில் வந்த மக்கள் ஏமா ற்றத்துடன் திரும்பி சென்றதையும் காண முடிந்தது. 

விடுவிக்கப்பட்ட கிராமத்தின் நான்கு பகு திகளும் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில் தம்மால் எவ்வாறு மீள் குடியமர முடியும் எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. 
இதேவேளை குறித்த தேவாலயத்திற்கு முப்பது வருடங்களின் பின்னர் வந்த அப்பகு தியை சேர்ந்த மக்கள் உருக்கத்துடன் வழிப ட்டதோடு, தேவாலயம் மற்றும் பாடசா லையை விடுவித்தமைக்கு நன்றியும் தெரி வித்தனர்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila