எக்னெலிகொட வழக்கின் சந்தேகநபரான இராணுவப் புலனாய்வு அதிகாரியின் திருட்டு அம்பலம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 5வது சந்தேகநபரான ரவிந்திர ரூபசேன என அழைக்கப்படும் ரஞ்சித் என்பவரிடம்  பெருமளவு பணம் மற்றும் நகைகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 5வது சந்தேகநபரான ரவிந்திர ரூபசேன என அழைக்கப்படும் ரஞ்சித் என்பவரிடம் பெருமளவு பணம் மற்றும் நகைகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
           
இவரிடம் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. திருட்டு சம்பவங்கள் காரணமாக குறித்த சந்தேகநபர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ரவிந்திர ரூபசேன இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றியுள்ளார்.
மின்னேரியா பொலிஸாருக்கு ரவிந்திர ரூபசேனவிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமையவே இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன. நவம்பர் மாதம் 7ஆம் திகதி மின்னேரிய பொலிஸாரிடம் தனது வீட்டை உடைத்து 1118000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 538000 ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறித்த சிப்பாய் முறைப்பாடு செய்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila