தமிழரசுக்கட்சியின் ஏகபோக உரிமை! பி.மாணிக்­க­வா­சகம்

தமிழரசுக்கட்சியின் இத்தகைய செயற்பாடானது,
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாட்டு உரிமையையும் அரசியலில் பங்களிப்பு உரிமையையும் அப்பட்டமாக மீறுகின்ற ஓர் உரிமை மீறல் செயற்பாடாகவே காணப்படுகின்றது

ஒரு புறம் சர்­வ­தேச மனித உரி­மைகள் தினம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. மறு­பு­றத்தில் மிகவும் பர­ப­ரப்­பாக உள்ளூ­ராட்சி சபை தேர்­த­லுக்­கான முதல்கட்ட வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்­தலில் மனித உரிமை எவ்­வாறு பேணப்­ப­டு­கின்­றது என்­பது பற்­றியும், நாட்டின் மனித உரி­மைகள் நிலை­மைகள் குறித்தும் சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

இத்­த­கைய சிந்­த­னையைத் தூண்­டு­வ­தற்குக் காரணம் இல்­லாமல் இல்லை. இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்னர், 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐ.நா. மன்­றத்தின் பொதுச்­ச­பையில் தீர்­மா­ன­மாகக் கொண்டு வரப்­பட்ட சர்­வ­தேச மனித உரிமைப் பிர­க­ட­ன­மா­னது அடுத்த வருடம் 70 ஆண்டு நிறைவைக் கொண்­டா­ட­வுள்­ளது. இந்தக் கொண்­டாட்­டத்­திற்­கான ஆயத்­தங்­களில் இலங்கை உட்­பட சர்­வ­தேச நாடுகள் பலவும் மும்­மு­ர­மாக இப்­போதே ஈடு­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே நாட்­டி­னதும், தேர்­த­லி­னதும் மனித உரிமை நிலை­மைகள் குறித்த சிந்­தனை எழுந்­துள்­ளது.

போர்க்­கா­லத்தில் இறை­மை­யு­டைய அர­சாங்­கமே மனித உரி­மை­களை மீறி, போர்க்­குற்­றங்­களை இழைத்­தி­ருக்­கின்­றது என்று பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பில் இருந்து குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அத்­துடன், நாட்டில் மனித உரி­மைகள் நியா­ய­மான முறையில் மதிக்­கப்­ப­ட­வில்லை என்றும், சிறு­பான்மை தேசிய இன மக்கள் அடிப்­படை மனித உரி­மை­க­ளுடன் வாழ்­வ­தற்­கு­ரிய சூழல் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும் கூறப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக யுத்த மோதல்கள் நடைபெற்ற காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களை மீறிய போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்புக்கூறு­கின்ற கட­மையை அர­சாங்­கங்கள் தொடர்ந்து தட்­டிக்­க­ழித்து காலத்தை இழுத்­த­டிக்கும் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­வ­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

போர்க்­காலச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற, ஐ.நா. பிரே­ரணை மூல­மான சர்­வ­தேச அள­வி­லான அழுத்­தங்­க­ளுக்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்து இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்ள போதிலும், அதனை நிறை­வேற்­றுவதில் மந்தகதி­யான போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

போருக்குப் பிந்­திய காலப்­ப­கு­தி­யிலும் நாட்டில் மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வான முறையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­திலும் அர­சாங்கம் ஆர்­வ­மற்­றி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

மனித உரி­மைகள்

மனி­தர்கள் சுதந்­தி­ர­மாக, கௌர­வத்­திலும் உரி­மை­க­ளிலும் சம­மா­ன­வர்­க­ளா­கவே பிறக்­கின்­றார்கள் என்­பது அனைத்­து­லக மனித உரிமை சாச­னத்தின் அடிப்­படைக் கோட்­பா­டாகும். சுதந்­திரம், கௌரவம், சம உரிமை என்­பன பிறப்­பி­லேயே உறுதி செய்­யப்­ப­டு­கின்­றன. எனவே, இவை மனி­தரின் பிறப்­பு­ரி­மை­யாகும். இந்த பிறப்­பு­ரி­மையை மீறு­வ­தற்கோ, ஒருவர் மீது மற்­றவர் ஆதிக்கம் செலுத்தி உரி­மை­களை மீறு­வ­தற்கோ இயற்­கையில் எந்த அதி­கா­ரமும் கிடை­யாது. அத்­த­கைய அதி­கா­ரத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு எவ­ருக்கும் இயற்கை அங்­கீ­காரம் வழங்­க­வில்லை. அவ்­வாறு செயற்­ப­டு­வது இயற்­கைக்கும் இயற்கை நீதிக்கும் முர­ணா­னது, எதி­ரா­னது என்­பதே மனித உரிமை சாச­னத்தின் அடிப்­படை நிலைப்­பா­டாகும்.

நாம் அனை­வரும் சுதந்­தி­ர­மா­கவும் உரி­மை­களில் சம­மா­கவும் பிறக்­கிறோம். இன, நிற, பால், மொழி, சமய, அர­சியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு என்­ப­வற்றில் பாகு­பாடு காட்­டப்­படக் கூடாது. எவரும் அடிமை இல்லை எவரும் சித்­த­ிர­வ­தைக்கு உட்­ப­ட­லா­காது.

சட்­டத்­தின்முன் அனை­வ­ருக்கும் சம­வு­ரிமை. நியாய­மற்று எவ­ரையும் தடுத்து வைக்­க­மு­டி­யாது. நீதி­யான வழக்­குக்­கான உரிமை. குற்றம் நிரூ­பிக்­கப்­படும் வரை ஒருவர் நிர­ப­ராதி. நட­மாடும் சுதந்­திரம். துன்­பு­றுத்­த­லி­லி­ருந்து புக­லிட உரிமை. தேசி­யத்­துக்­கான உரிமை சிந்­தனை சுதந்­திரம்.

உள்­ளு­ணர்வு சுதந்­திரம், சமயச் சுதந்­திரம். கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம். மக்­க­ளாட்சி உரிமை. சமூக பாது­காப்பு உரிமை. தொழி­லாளர் உரி­மைகள். கல்­விக்­கான உரிமை. பண்­பாட்டு பங்­க­ளிப்பு உரிமை, ஆக்­க­வு­ரிமை.நியா­ய­மான விடு­தலை பெற்ற உலகு. மனித உரி­மை­களை எவரும் பறிக்க முடி­யாது என்ற, மனித உரிமை சாச­னத்தின் முக்­கிய உறுப்­பு­ரை­களை மீறு­வ­தற்கு எவ­ருக்கும் உரி­மையோ அதி­கா­ரமோ கிடை­யாது.

உலகின் அதி முக்­கிய ஆவ­ண­மாக மதிக்­கப்­ப­டு­கின்ற மனித உரிமை சாசனம் 500க்கும் மேற்­பட்ட மொழி­களில் உரை­பெ­யர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உலகின் அநே­க­மாக அனைத்து நாடு­க­ளி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள மனித உரிமை சாச­னத்தின் உறுப்­பு­ரைகள் அவற்றின் அர­சி­ய­ல­மைப்­புக்­களில் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நாடு­களில் இலங்­கையும் ஒன்று என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நீதி­மன்­றங்­க­ளிலும், பேர­வைகள் மற்றும் பாராளு­மன்­றங்கள், தீர்ப்­பா­யங்கள் போன்­ற­வற்றில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரால் அல்­லது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் நீதியை நிலை­நி­றுத்­து­வ­தற்கும் நியாயம் பெறு­வ­தற்கும் இந்த உறுப்­பு­ரைகள் மேற்கோள் காட்­டப்­பட்டு அவற்றின் அடிப்­ப­டையில் வாதி­டப்­ப­டு­கின்­றன.

இருப்­பினும் இலங்­கையில் மனித உரிமை சாச­னத்தின் உறுப்­பு­ரைகள் உரிய முறையில் மதிக்­கப்­ப­டு­வ­தில்லை. நடை­மு­றையில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­து­மில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­யது. இதன் கார­ண­மா­கவே மனித உரிமை நிலை­மைகள் இங்கு இன்னும் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று சர்­வ­தேச அளவில் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளி­னாலும், மனித உரிமை அமைப்­புக்­க­ளி­னாலும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

நீக்­கப்­பட வேண்­டிய பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம்

தனி­நாடு கோரி, அர­சுக்கு எதி­ராக ஆயு­த­மேந்திப் போரா­டிய விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்தி அவர்­களை வலு­வி­ழக்கச் செய்­வ­தற்­காகக் கொண்டு வரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் மிக மோச­மான அளவில் மனித உரி­மை­களை மீறு­வ­தற்கு வழி­ச­மைத்­தி­ருந்­தது.

சந்­தே­கத்தின் பேரில் ஆட்­களைக் கைது செய்­வ­தற்கும் கைது செய்­யப்­பட்­ட­வரை விசா­ரணை செய்­வ­தற்­காக நீண்­ட­காலம் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைப்­ப­தற்கும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழி வகுத்­தி­ருக்­கின்­றது. இந்­தச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பலர் சிறைச்­சா­லை­களில் உரிய விசா­ர­ணைகள் இல்­லா­மலும், வழக்கு தாக்கல் செய்­யப்ப­டா­மலும் பல வரு­டங்­க­ளாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராகத் தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற வழக்­கு­களில் அளிக்­கப்­ப­டு­கின்ற தீர்ப்பில் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டும்­போது, அவர்கள் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வரு­டக்­க­ணக்­கான காலப்­ப­குதி கணக்கில் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு நீதி­மன்ற விசா­ர­ணையில் தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­படும் வரையில் அவர்கள் சிறைச்­சா­லை­களில் இருந்த காலப்­ப­குதி தண்­டனைக் கால­மாக நீதி­மன்­றங்­களில் கரு­தப்­ப­டு­வ­தில்லை. அதற்கு மேல­தி­க­மா­கவே தீர்ப்பில் அளிக்­கப்­ப­டு­கின்ற சிறைத் தண்­ட­னை­யையும் அவர்கள் அனு­ப­விக்க நேரி­டு­கின்­றது. இது அப்­பட்­ட­மான மனித உரிமை மீற­லாக இருந்த போதிலும், அது­கு­றித்து மனித உரிமை சாச­னத்தின் உறுப்­பு­ரி­மை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக ஒப்­புக்­கொண்டு உறு­தி­ய­ளித்­துள்ள அர­சாங்­கமோ அல்­லது நீதி­மன்­றங்­களோ கவனம் செலுத்­து­வ­தில்லை.

அத்­துடன் வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் நடத்­தப்­ப­டு­கின்ற விசா­ர­ணை­க­ளின்­போது சந்­தேக நபர்கள் அளிக்­கின்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்­தையே முக்­கி­ய­மான சாட்­சி­ய­மாகக் கொண்டு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­ப­டு­கின்ற வழக்­கு­களில், தீர்ப்­புக்கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. விசா­ர­ணை­யின்­போது அளிக்­கின்ற வாக்­கு­மூ­லமே, ஒப்­புதல் வாக்­கு­மூ­ல­மாக, தனக்கு எதி­ரான சாட்­சி­ய­மாகப் பயன்­ப­டுத்­தப்­படும் என்ற நடை­மு­றையைத் தெரிந்து கொண்டு எவரும் இயல்­பாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தில்லை. குற்றம் சுமத்­து­வ­தற்கு ஏது­வான வகையில் அச்­சு­றுத்­தியும், சித்­தி­ர­வதை செய்­துமே ஒப்­புதல் வாக்­கு­மூலம் பெறப்­ப­டு­கின்­றது என்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இது­போன்ற பல கார­ணங்­க­ளுக்­காக மனித உரி­மை­க­ளையும் அடிப்­படை உரி­மை­க­ளையும் மீறு­வ­தற்­கு­ரிய அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­ய­கமும், மனித உரிமைப் பேர­வையும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் சர்­வ­தேச நாடு­களும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

இலங்கை அர­சாங்கம் கூறி­யதைப் போன்று, பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தற்­காகக் கொண்­டு­வ­ரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை, நீக்க வேண்டும். அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. உரிமை மீறல் விட­யங்­களில் பொறுப்புக்கூறும் நட­வ­டிக்கையின் ஓர் அம்­ச­மாக இதனைச் செய்ய வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதற்கு அமை­வாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதிலும், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழான வழக்­குகள்

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இப்­போது நடை­மு­றையில் இல்லை. அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தில்லை என்று அர­சாங்கம் கூறு­கின்­ற­போ­திலும், முன்னர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைக்­காகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களில், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்ட விதி­களின் கீழேயே குற்­றஞ்­சு­மத்­தப்­பட்டு, வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டு­கின்­றது. அந்தச் சட்­டத்­திற்கு அமை­வா­கவே தீர்ப்புக்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்த வகை­யி­லேயே, அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்தில் நடந்த வழக்­கொன்றில் முன்னாள் விடு­த­லைப்­பு­லிகள் 7 பேருக்கு தலா 56 வரு­டங்கள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

வில்­பத்து பகு­தியில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 7 சுற்றுலாப் பய­ணிகள் பயணம் செய்த கெப் வாகனம் ஒன்றின் மீது கிளேமோர் தாக்­குதல் நடத்தி, அவர்­களைக் கொலை செய்­த­தாகக் குற்றம் சுமத்தி இந்த 7 பேருக்கும் எதி­ராக தலா 8 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்தி வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் ஒவ்­வொன்­றுக்கும் 7 ஆண்­டுகள் வீதம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் 56 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை வழங்கி அநு­ரா­த­புரம் விசேட மேல் நீதி­மன்ற நீதி­பதி மகேஷ் வீரமன் தீர்ப்­ப­ளித்­துள்ளார். இந்த சிறைத் தண்­ட­னையை ஏக காலத்தில் அனு­ப­விப்­ப­தற்கும் நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார். இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள 7 முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களும் 2011 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு கடந்த 6 வரு­டங்­க­ளாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மனித உரி­மை­களை மீறு­கின்ற பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் மட்­டு­மல்­லாமல், குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் விசா­ர­ணை­க­ளின்­போது மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

விசா­ர­ணை­க­ளின்றி நீண்­ட­கா­ல­மாக, அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை, யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்து சென்­ற­வர்கள் சொந்த இடங்­களில் மீள்­கு­டியேற முடி­யாத வகையில் காணிகள் இரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளமை, இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளமை, சந்­தே­கத்தின் பேரில், சட்ட ரீதி­யாகக் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்ட பின்னர்

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளமை உள்­ளிட்ட பல்­வேறு வடி­வங்­களில் மனித உரி­மை­களும், அடிப்­படை உரி­மை­களும் மீறப்­பட்­டி­ருப்­ப­தாக அர­சாங்­கத்தின் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை உரிய ஆதா­ரங்­க­ளுடன் அர­சாங்­கத்­தினால் மறுத்­து­ரைக்க முடி­ய­வில்லை.

தேர்­த­லிலும் உரிமை மீறல்கள்......?

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் உரிய காலத்தில் நடத்­தப்­ப­ட­வில்லை. அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக அவைகள் பின்­போ­டப்­பட்­டி­ருந்­தன. உரிய காலத்தில் தேர்தல் நடத்­தப்­ப­டா­மை­யா­னது ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கை­யாகும். பொது­மக்­க­ளு­டைய வாக்­கு­ரி­மையை மறுக்­கின்ற செயற்­பா­டாகும். இது ஜன­நா­யக உரிமை மீறல் மட்­டு­மல்ல அடிப்­படை மனித உரிமை மீற­லு­மாகும். இந்த உரிமை மீறல் தொடர்­பாக பல ஜன­நா­யக அமைப்­புக்கள் தமது எதிர்ப்பை ஏற்­க­னவே வெளி­யிட்­டி­ருந்­தன. தேர்தல் கண்­கா­ணிப்பு குழுக்கள் அர­சாங்­கத்தின் மீது பகி­ரங்­க­மாக குற்றம் சுமத்­தி­யி­ருந்­தன. இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே முதலில் 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் பின்னர் ஏனைய மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­த­லுக்­கு­ரிய வேட்பு மனுத்தாக்கல் செய்­வ­தற்­கான அறி­விப்பை அர­சாங்கம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. அந்த வகையில் தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அர­சாங்கம் பல்­வேறு வழி­களில் மனித உரிமை மீறல்­க­ளிலும், அடிப்­படை உரிமை மீறல்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் தேர்­த­லை­யொட்டி ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­மை­களில் தேர்தல் ரீதி­யாக உரி­மைகள் மீறப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் தற்­போது எஞ்­சி­யுள்ள மூன்று பங்­காளிக் கட்­சிகள் மத்­தியில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் பிணக்­குகள் ஏற்­பட்­டி­ருந்­தன. கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்சி தனக்கு ஏற்ற வகையில் தொகுதிப் பங்­கீ­டு­களைச் செய்து ஏனைய கட்­சி­களின் விருப்­பத்­தையும் கோரிக்­கை­க­ளையும் புறந்­தள்ளியிருந்­தது. இதனால் டெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்­சி­களும் மனக்­க­சப்­புற்று கூட்­ட­மைப்பின் வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தில்லை என்ற முடிவை மேற்­கொள்ள நேர்ந்­தி­ருந்­தது.

நாளை தொடரும்....

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila