பங்கு வேண்டுமாம் புளொட்! பேரம் பேசும் சித்தார்த்தன்!எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 3 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யை­யும், ஏனைய மாவட்­டங்­க­ளில் தலா ஓர் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தின் தவி­சா­ளர் பத­வி­யை­யும் கோர­வுள்­ள­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான புளொட் அமைப்­பு வெளிப்படு த்தியுள்ளது. 

ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் இன்று கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யி­லேயே, அந்­தக் கட்­சி­யின் தலை­வர் த.சித்­தார்த்­தன் தெரிவித்துள்ளார். மேலும் தெரி­வித்­த­தா­வது, வடக்கு மாகா­ணத்­தில் வன்­னிப் பிராந்­தி­யத்­தி­லுள்ள மாவ ட்­டங்­க­ளின் பங்­கீ­டு­கள் தொடர்­பில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டம் தொடர்­பில் மாத்­தி­ரமே இன்­னும் பேச்சு முன்­னெ­டுக்­க­ வேண்­டி­யுள்­ளது. 

மற்­றொரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ, தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் பேசி இணக்­கப்­பாட்டுக்கு வந்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. நாம், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் மூன்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர் பத­வி­யைக் கோர­வுள்­ளோம். மானிப்­பாய், சங்­கானை, வலி.தெற்கு ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யையே பெரும்­பா­லும் கோரு­வோம். 

இருப்­பி­னும் சில­வே­ளை­க­ளில் இச் சபை­க­ளில் மாற்­றம் வர­லாம். ஆனால் நாம் கோரும் எண்­ணிக்­கை­யில் மாற்­றம் வராது எனத் தெரிவித்துள்ளார். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila