கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிகள் என்று வீட்டு வாசலுக்கு வரக்கூடாது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், முல்லைத்தீவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும்(11.01.2018) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 309 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த இராணுவத்திடம் கையளித்த, கைது செய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்களின் போராட்டத்துக்கு எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில், தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடோம் என உறவுகள் தெரிவித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தலைமைகள் மீது காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கொதிப்பில் உள்ளனர் .
இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று வீட்டு வாசல் படிக்கு வரக்கூடாது என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அத்தோடு நேற்று முன்தினம் இவர்களின் போராட்டத்துக்கு ஜேர்மன் நாட்டின் ஊடகவியலாளர்கள் வருகை தந்து, அவர்களது நிலைகளை, கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila