உங்கள் பிரச்சினை தீரும் எங்கள் பிரச்சினை தீருமா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முடித்து பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தக்கமுறையில் பயன்படுத்தத் தெரியாத கூட்டு எதிரணியினர் தங்களுக்கான வெற்றியை தவறாகக் கணித்து, பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையாகக் கொண்டு வந்ததனூடு தமக்குக் கிடைத்த வெற்றியைப் பிசக்கிக் கொண்டனர் என்று கூறுவதே பொருத்துடையதாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதியும் கூட்டு எதிரணியின் மூலகர்த்தாவுமாகிய மகிந்த ராஜபக்­ கையயழுத்திடவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதில் மிகவும் இறுக்கமாக இருந்த மகிந்த ராஜபக்­ அந்தப் பிரேரணையில் கையயழுத் திடாதது ஏன்? என்ற கேள்விக்குப் பலவாறான பதில்கள் கிடைக்கப் பெறும்.

அதில் ஒன்று, சிலவேளை ரணில் விக்கிரம சிங்கவை பிரதமர் பதவியில் இருந்து வீழ்த்த முடியாமல் போனால், தமக்கு எதிரான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதி தீவிரப்படுத்துவார் என்பது மகிந்த ராஜபக்­வுக்கு நன்கு தெரியும்.

அதாவது மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் நடந்த நிதி விவகாரங்கள் தொடர்பில் மகிந்த வின் குடும்ப அங்கத்தவர்கள் அடிக்கடி விசார ணைக்கு உட்பட்டு வருகின்றனர். இதில் மகிந்த ராஜபக்­வின் மனைவிகூட விதிவிலக்கல்ல.

நிலைமை இதுவாக இருக்கையில், நம்பிக்கை யில்லாப் பிரேரணையில் தானும் கையயழுத்திட்டால்; குறைந்தது தொலைபேசியில் கூட பிரதமர் ரணிலுடன் கதைக்க முடியாத அவல நிலை தனக்கு ஏற்படும் என்பது மகிந்த ராஜபக்­வுக்கு நன்கு தெரியும்.

இந்நிலையிலேயே அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையயழுத்திடுவதைத் தவிர்த்தார் எனலாம்.

எதுஎவ்வாறாயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மகிந்த ராஜபக்­ கையயழுத் திடுவதைத் தவிர்த்ததனால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவானவர்கள் அதில் உறுதியாக இருக்க முடியாதவர்களாக சறுக்கல் தீர்மானங்களை எடுக்க வேண்டிய துர்ப் பாக்கிய நிலைக்கு ஆளாகினர்.

இவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிய ஒரு சிறுபார்வை.

தவிர, எதுஎப்படி நடந்தாலும் அவர்கள் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடுவார் கள். ஆனால் எங்கள் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண்பார்களா? என்றால் அதுதான் இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால், தங்களுக்குள் முரண்படுவதுபோல காட்டிக் கொண்டு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லா மையால் தீர்வு காண்பது கடினம் என்பதாகக் கூறிக்கொள்வர்.

ஆக, என்னதான் பிரேரணைகளும் வெற்றி தோல்விகளும் வந்தாலும் எங்கள் பிரச்சி னைக்கு அவர்கள் ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள் என்பதுதான் மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் பாடம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila