துரியோதனா! நீ செய்வது மாதவறு என்று வீஷ்மரால் சொல்ல முடியவில்லை


துரியோதனின் கட்டளைப்படி பாஞ்சாலி கெளரவர் சபைக்கு அழைத்து வரப்படுகிறாள். அவளை மானபங்கப்படுத்த துச்சாதனன் தயாராகிறான். 

அந்தோ! சபையில் இருந்த அத்தனை பேரும் துரியோதனின் செயல் கண்டு குமுறுகின்றனர். எனினும் துகிலுரிதலைத் தடுக்க யாரும் துணிந் திலர்.

படைத் தளபதியாகிய வீஷ்மரேனும் துச்சாதனா! உன் செயலை நிறுத்து. இல்லையேல் என் வில்லுக்கு நீ இரையாகுவாய் என்று கர்ச் சித்திருக்க வேண்டும்.

ஆனால் பிதாமகரோ மெளனமாகவே இருந் தார். வீஷ்மர் மெளனம் காக்கும்போது - மற்றை யவர்கள் துரியோதனனைக் கண்டிப்பதென் பது சாத்தியமற்றது.

கெளரவர் சபையில் ஒரு பெண்ணின் துகிலை கலைந்து அவளை மானபங்கப்படுத்தும்போது, குரல் கொடுக்காதவர்கள் பின்னாளில் கண்டிப் பதால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவ தில்லை.

ஆக, துரியோதனன் செய்த மிகப்பெருங் கொடுமையை வீஷ்மர் கண்டிக்கத் தவறியது ஏன்?
துரியோதனனுக்கு அவர் பயந்து போனாரா என்றால் அதுதான் இல்லை. வில்வித்தையில்; போர்க்கலையில் வீஷ்மருக்கு நிகர் யாரு மில்லை. இதற்கு மேலாக வீஷ்மர் ஒரு துறவி. 

ஒரு இராச்சியத்தில் படைத்தளபதியாக இருப்பவர் துறவியாயின் அவர் எவர்க்கும் அஞ்சமாட்டார். துறவிக்கு வேந்தன் துரும்பு என்ற பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டு.

இவ்வாறாக நிலைமை இருக்கையில், வீஷ்மர் மெளனம் காத்தார் என்றால், அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும்.

அந்தக் காரணம் என்ன என்றால்? துரி யோதனனின் உணவை உண்டதுதான் ஒரே காரணமாகும்.
ஆம், ஆட்சியில் இருக்கக்கூடிய கெளரவர் தலைவன் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதனால் அவனுக்கு எதிராக கதைப்பதும் போர் தொடுக்க நினைப்பதும் அறமன்று.

அதாவது ஒருவரிடம் கடன்பட்டுவிட்டால் - கடமைப்பட்டுவிட்டால் - அவர் சார்ந்த நீதி உண ரப்படுவதென்பது சாத்தியமாகாது.

இந்த நிலையே பிதாமகர் எனப் போற்றப்பட்ட வீஷ்மருக்கு ஏற்பட்டது. இந்த நிலைமை பற்றி இப்போது எதற்காக ஆராய்கிறீர்கள் என்றால் எல்லாம் காரணத்தோடுதான்.

ஆம், ஈழத் தமிழினம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில், வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளை இழந்த நிலையில் கூட தமிழினம் சார்ந்த அரசியல் தலைமை வாய்திறந்து கதைக்க முடியாத அளவில் உள்ளது.

ஏன்! அப்படி என்று யாரேனும் வியந்து கேட்டால், அவர்களும் வீஷ்மரின் நிலைமையில் இருப்பதுதான் காரணம் என்பதே பதிலாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila