வாய்திறந்து கதைக்கவும் உங்களால் முடியவில்லையோ


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் இங்கு நாம் பிரஸ்தாபித்த விடயங்கள் பல.
கூட்டமைப்பின் போக்குத் தொடர்பில் நாம் முன்வைத்த விடயங்கள் இம்மியும் பிசகாமல் நடந்தேறி இருப்பதை எங்கள் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அதேநேரம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே தமிழ் மக்களின் அரசியல் தலைமைக்கு பொருத்தமானவர் என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு சரி யான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருக்குமாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத் துக்கு உட்பட்டிருக்கும்.
ஆனால் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்களை இயங்காமல் செய்வதற்காக கூட்ட மைப்புக்குள் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்கள் சிலர் செய்த நாசங்கள் கொஞ்சமல்ல.

மாகாண சபை அமர்வுகளில் குழப்பங்களை ஏற் படுத்துவது, முதலமைச்சருக்கு தேவையில்லாத தொந் தரவுகளைக் கொடுப்பது, உறுப்பினர்களின் கள்ளக் கையயழுத்துடன் கடிதங்களை அனுப்புவது, ஹோட்டல் களில் கூடி முதலமைச்சரின் பதவியைப் பறிக்க திட்டம் தீட்டுவது என ஏகப்பட்ட அட்டூழியங்களை கூட்டமைப்புக் குள் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குறிப்பிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செய்து முடித்தனர்.

எனினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனக்கு எதிராகச் செயற்பட்ட அத்தனை சதிகளையும் முறியடித்து மக்களின் ஒத்துழைப்போடு தனது கருத் துக்களையும் ஆணித்தரமாக முன்வைத்து வருகிறார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய புள்ளிகள் மூலமாக தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களை நசுக்குவதற்கு திட்டம் தீட்டிய வெளிநாடுகள் கூட இன்றைய நல்லாட்சியின் குழப்பங்கண்டு குழம்பிப் போயுள்ளனர்.

அத்துடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முன் வைக்கின்ற கருத்துக்களில் நியாயமும் உண்மைத்தன் மையும் உண்டென்பதையும் வெளிநாடுகள் ஏற்றுள்ளன.
அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர் கள் முன்வைக்கின்ற கருத்துக்களை வெட்டமுடியாத அளவில் நல்லாட்சியும் திண்டாடுகிறது.

தமிழ் மக்களுக்குச் சுயாட்சி கொடுப்பதை சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் என்றால், எல்லா மாகாண சபை களுக்கும் சுயாட்சி அதிகாரங்களைக் கொடுங்கள் என்ற முதலமைச்சரின் ஆலோசனை நிராகரிக்க முடியாதது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காகவே மாகாணசபை முறைமையை நாடு முழுவதி லும் அறிமுகப்படுத்த முடியும் என்றால், தமிழ் மக்க ளுக்கு சுயாட்சி வழங்குவதற்காக எல்லா மாகாண சபைகளுக்கும் சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதில் அதிக கடினம் இருக்க முடியாது.

ஆக, இதுபோன்ற நியாயபூர்வமான கருத்துக் களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைக்கின் றார். ஆனால் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர் பில் தர்க்கரீதியாக கருத்துரைப்பதில் இருந்து தங் களை புறநீக்கம் செய்துள்ளனர். இதுதான் ஏனென்று தெரியாமல் உள்ளது.

இலங்கை அரசாங்கம் எங்கள் பிரச்சினை தொடர் பில் தீர்வை முன்வைக்கிறதா இல்லையா என்பதற்கப் பால், எங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை தெளி வாக எடுத்துரைப்பது தமிழ் அரசியல் தலைமையின் தார்மீகக் கடமை.
ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைக் கூட செய்வ  திலிருந்து பின்னிற்பதென்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

எதுஎவ்வாறாயினும் தமிழ் அரசியல் தலைமை தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந் தத் துரோகத்தை கூட்டமைப்பில் இருக்கக்கூடிய ஒரு சிலரே செய்தனர் என்று கூறினாலும் அந்தத் துரோகத் தனம் நடக்கும்போது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அமைதியாக - மெளனமாக இருந்தமை மன்னிக்க முடியாத குற்றம்.
எனவே போருக்குப் பின்பு எங்கள் அரசியல் தலைமை தமிழினத்துக்கு என்ன செய்தது என்பதை மிகத் தெளி வாக உணர்ந்துகொண்ட தமிழ் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila