கைதட்டும் உரிமையையும் தமிழ் உத்தியோகத்தர் இழந்தரோ!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த இரண்டாம் திகதி “ஜனாதிபதி மக்கள் சேவை” என்ற நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கூடவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், உள்நாட்டு அலுவல் கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஏம்.ஏ.சுமந்திரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் அவர்கள் உரையாற்றும் போது, மண்டபத்தில் இருந்தவர்கள் கைதட்டி கரகோசம் செய்தனர்.

இவ்வாறு கரகோசம் செய்தவர்களிடம் விளக்கம் கோரும்படியும் அவர்களை மன்னிப் புக் கேட்கும்படியும் யாழ்.மாவட்ட அரச அதிபர் அந்தந்த பிரதேச செயலர்களுக்கு அறிவித் தல் விடுத்துள்ளார்.

இவ்வாறு விளக்கம் கோருவதற்கு யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் யாரோ அழுத்தம் கொடுத்திருப்பர் என்பது வேறு கதை.

இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் கைதட்டுவதற்கும் உரிமையற்றவர்கள் என்பதுதான்.

ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் கைதட்டுவது, தடை செய்யப்பட்டது எனில், அதுபற்றி ஏலவே அறிவித்தல் கொடுத்திருக்க வேண்டும்.

இதைவிடுத்து அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் உரையாற்றும்போது தமிழ் அரச உத்தியோகத்தர்கள் கைதட்டினர் என்ப தற்காக, அவர்கள் விளக்கம் தரவேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால், இது எந்த வகையில் நியாயம் என்பதை இந்த உல கம்தான் தீர்மானிக்க வேண்டும்.

எதுவாயினும் கைதட்டியதற்காக அரச உத்தியோகத்தர்கள் மன்னிப்புக் கேட்க வேண் டும் என்ற அறிவித்தலை யார் சரி தென்பகுதி யில் விடுத்திருந்தால், தென்பகுதியில் உள்ள அத்தனை அரச அமைப்புக்களும் முடங்கி யிருக்கும், தொழிற்சங்கப் போராட்டம் வெடித் திருக்கும் ஆர்ப்பாட்டங்கள் பாராளுமன்றத்தை நோக்கிய ஊர்வலங்கள் நடந்திருக்கும்.

இவற்றுக்கும் மேலாக பாராளுமன்ற உறுப் பினர்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு ஆத ரவாகக்குரல் கொடுத்திருப்பர் மனித உரிமை அமைப்புக்களும் பெளத்த பீடங்களும் இலங்கை அரசைக் கண்டித்திருக்கும். 

இதன் எதிரொலி யாக அரசாங்கமே ஆட்டம் காணும் அவலத் துக்கு ஆளாகியிருக்கும்.

ஆனால் இங்கு கைதட்டியவர்கள் தமிழ் அரச உத்தியோகத்தர்கள். அவர்கள் கைதட்டி யது தமிழ் அமைச்சரின் உரையின்போது,

எனவே கைதட்டியவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதுதான் நிபந்தனையாயிற்று.

ஓ! தமிழ் மக்களைக் கொன்றொழிக்க வேண் டும் என சிங்கள பேரினவாதிகள் கர்ச்சித்த போது, கைதட்டி கரகோசம் செய்த சிங்கள அரச உத்தியோகத்தர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அரசாங்கம் அன்று உத்தர விட்டிருந்தால் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக் கைதட்டல் பற்றியும் சிந்தித்திருக்கலாம்.

இதைவிடுத்து அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு வேறு நியாயம் என்றால், தமிழ் அரச உத்தியோகத்தர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வ தில் அதிக கடினம் இருக்க முடியாது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila