கட்சி அரசியலைக் கடந்து இனப்பற்றோடு சிந்தியுங்கள்

வடக்கு மாகாண அரசின் ஆயுட்காலம் எதிர் வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின் றது.

ஏலவே கிழக்கு மாகாண அரசின் ஆயுட் காலம் முடிவுற்று அங்கு ஆளுநரின் நிர்வாகம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதேபோல் வடக்கு மாகாணத்திலும் எதிர் வரும் 25ஆம் திகதிக்குப் பின்னர் ஆளுநரின் அதிகாரம் அமுலுக்கு வரும்.

ஆக, இப்போது தமிழர்களின் தாயகமாகிய வடக்கிலும் கிழக்கிலும் ஆளுநரின் நிர்வாகம் அரசியலமைப்புக்கு அமைவாக அமுலாகிறது.

இந்த நிலைமை மாகாண அரசு என்ற நடை முறை தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரத்துக்கு எந்தளவு சுயாதீனத்தைக் கொடுத்து நிற்கிறது என்பதைப் புரிதல் கடினமன்று.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண அரசு என்பது தனது ஆட்சிக்கால முடிவுக்குப் பின்னர் எவ்வா றான சூழ்நிலைக்கு உட்படுகிறது என்பதைத் தமிழ் மக்கள் இப்போது யதார்த்தமாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆக, தமிழ் மக்களின் அரசு என்று நாம் கூறிக் கொண்டாலும் அந்த அரசுக்குரிய காலம் முடிந்து மீண்டும் தேர்தல் வரும்வரையில், ஆளுநரின் ஆட்சி என்பது மத்திய அரசின் நினைப்பையும் நிலைப்பாட்டையும் நிறைவேற் றும் பணியைச் செய்து முடிப்பதாகவே இருக் கும்.
இத்தகைய நிலையில் எங்களை நாங்கள் குறைபட்டுக் கொண்டு இருப்பதான நிலைமை மிகமோசமானதாகும்.

முப்பது ஆண்டு காலப் போராட்டமும் அதற் கான எங்கள் உறவுகளின் உயிர்த்தியாகமும் எங்களிடமிருந்து எளிதாக மறைந்து - மறந்து போகுமாக இருந்தால், அதைவிட்ட பாவச் செயல் வேறு எதுவுமாக இருக்க முடியாது.

எனவே இனத்தின் பேராலேனும் நாம் ஒன்று பட வேண்டும். இதில் நாம் கூறுகின்ற ஒற்றுமை என்பது தமிழ் மக்கள் சார்ந்தும் தமிழ் அரசி யல்வாதிகள் சார்ந்தும் முன்மொழியப்படுவதாகும்.

அதாவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு தமிழ் மகனும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் இயங்குவதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் தமிழினம் என்ற பொது நிலைச் சிந்தனை எழும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் கட்சி அரசியல் சார்ந்து நிற்பதன் காரணமாக தாம் தாம் எந்தக் கட்சிக்குச் சார்பாக இருக் கிறார்களோ அந்தக் கட்சியின் கொள்கை கோட்பாட்டை சரியயன வாதிடுகின்ற கட்டாயத் துக்கு ஆளாகின்றனர்.

இதன்காரணமாக ஒட்டுமொத்தத் தமிழி னத்தின் நன்மைபற்றியும் நலன் பற்றியும் கவ னம் செலுத்த முடியாமல் போகின்றது.

இதுதான் என்றால் இல்லை, தமிழ் மக்கள் கட்சி அரசியல் சார்ந்து தமது ஆதரவை வழ ங்க, அரசியல் கட்சிகளே தேர்தல் அரசியலை மையப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது எங் ஙனம் என்பது பற்றிச் சிந்திப்பதும் தேர்தலில் வென்றதும் விலைபோகின்ற சூழ்நிலைக்கு ஆளாவதுமான மிகப்பெரும் துன்பியலை ஏற் படுத்தி விடுகின்றனர்.

இங்குதான் தமிழ் மக்கள் கட்சி அரசிய லைத் துறந்தும் தமிழ் அரசியல்வாதிகள் தேர் தல் அரசியலை நினைக்காமலும் எங்கள் தமி ழினம் பற்றிச் சிந்தித்து அதற்காகச் செயற்படு வது கட்டாயமானதாகின்றது. இதனை எம் இனத்தின் பெயரால் செய்தாக வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila