கட்டாக்காலி நாய்களுக்கு முடிவு கட்டுவது யார்?

வட பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை போதும் என்றாயிற்று.
வடபுலத்தில் நடக்கின்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் கணிசமானவை கட்டாக்காலி நாய்களால் ஏற்படுபவை.

இதுதவிர, தற்போது மழை காலம் ஆரம் பித்து விட்ட நிலையில் கட்டாக்காலி நாய்கள் காப்பெற் வீதிகளில் மலம் கழிக்கின்றன.

எங்கு பார்த்தாலும் நாய்களின் மலக்கழிவு கள் என்ற மிக மோசமான அருவருப்பும் சுகா தாரச் சீர்கேடுமாக இருக்கின்ற நாய்களின் எச்சங்களை வாகனங்களும் மோட்டார் சைக் கிள்களும் பாதசாரிகளும் மிதித்துச் செல் கின்றனர்.

அதிலும் குறிப்பாக நகர்ப் பகுதிகளில் இருக் கக்கூடிய பாடசாலைகளுக்கு முன்பாக வீதி களில் கிடக்கின்ற நாய்க்கழிவுகள் குறித்து எவரும் கவலை கொள்வதாக இல்லை.

காலைப்பொழுதில் வீதியயங்கும் நாய் எச் சம். மதியமாகும்போது அனைத்து எச்சங் களும் வாகனச் சில்லுகளில் மிதிபட்டு அந்தப் பிரதேசம் முழுவதிலும் பரப்பப்படுகின்றன.

இந்த அசிங்கமான நிலைமை குறித்து எவரும் சிரத்தை கொள்ளாமை சுகம்; என்ற விடயத்தில் நாம் அனைவரும் சுணைகெட்டுப் போய்விட்டோம் என்பதையே சுட்டி நிற்கிறது.

எனவே இதுவிடயத்தில் மாநகர, நகர, பட் டின, பிரதேச சபைகள் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களின் வாக்குகளைப் பெற்று உள்ளூ ராட்சி சபைகளைக் கைப்பற்றியவர்கள் தத்தம் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வலுவான தீர்மானங்களை மேற் கொள்ள வேண்டும்.
நாய்களைக் கொல்வதற்கும் அழிப்பதற்கும் மகிந்த சிந்தனை தடை செய்கின்றது எனில், அதற்கான மாற்று வழி என்ன என்பது பற்றி சிந்திப்பது அவசியமானது.

தெரு நாய்களால் விபத்துக்களும் விசர் நாய்க்கடிகளும் சுகாதாரச் சீர்கேடுகளும்  நடக்கின்றபோதிலும் அது தொடர்பில் உள்ளூ ராட்சி சபைகள் பாராதிருப்பது எந்த வகையி லும் நியாயமாகாது.

ஆக, நாய் வளர்ப்புத் தொடர்பில் இறுக்க மான நிபந்தனைகளை விதிக்கின்ற அதே நேரம், கட்டாக்காலி நாய்களின் தொல்லை யில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் செய்தாக வேண்டும்.

இவற்றுக்கு மேலாக வடபுலத்தில் சுற்று லாத்துறையை விஸ்தரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் நடக்கின்ற முயற்சிகள் வெற்றி தரவேண்டுமாயின் முதலில் வீதிகளில் தெரு நாய்கள் செய்கின்ற அசிங்கத்தை இல்லாமல் செய்வது கட்டாயமானது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila