நாடாளுமன்ற குழப்பத்தில் 2 இலட்சத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேதம்

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகள் குழுவொன்று மோதலினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையிலேயே சேத விபரங்கள் தொடர்பில் தற்போது அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மோதலின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு இயந்திரம், சபையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் ஆகியவை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில்  இலத்திரனியல் வாக்கெடுப்பு இயந்திரத்தின் சேதப் பெறுமதி 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனவும் சபையின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளின் சேதப் பெறுமதி 30 ஆயிரம் ரூபாய்  எனவும் அக்குழுவினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த நவம்பர் 14,15 மற்றும்16 ஆகிய திகதிகளில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila