முல்லையினில் 24ஆயிரம் ஏக்கர் முப்படைகள் வசம்!

mullaithivu
முல்லைத்தீவு மாவட்டத்தினில் தற்போது முப்படைகளது வசம் சுமார் 24ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அம்பகாமம் பகுதியில் 8500 ஏக்கர் நிலத்தில் விமானப் படையினரின் பாரிய முகாமும் கரிப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் 2500 ஏக்கரில் விமான நிலையத்துடன் கூடிய முகாமும் உள்ளதோடு ஏ9 வீதியில் முருகண்டிப் பகுதியில் 2 ஆயிரம் நிலத்தில் பாரிய இராணுவ முகாமும் உண்டு . அதேபோன்று கேப்பாபுலவு பகுதியில் மக்களின் நிலத்திற்கும் அப்பால் 2200 ஏக்கர் வனப்பகுதியில் பாரிய விமானப்படை முகாம் உள்ளது.
இதனிடையே முப்படைகள் வசம் மொத்தமாக 9 ஆயிரத்து 148 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளதாக நல்லிணக்க செயலணியினால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிட்டுள்ள தகவலில் இராணுவத்தினர் வசம் 540.29 ஏக்கர் தனியார் காணிகளும் 6 ஆயிரத்து 934.38 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் 671 ஏக்கர் தனியார் கானியும் 44.80 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது. இதேபோன்று விமானப் படையினர் வசம் 958 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் ஆயிரத்து 211.29 ஏக்கர் தனியார் காணிகளும 7 ஆயிரத்து 937.18 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம் வெலிஓயாவென்ற பேரினில் மணலாறு சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் மாவட்டத்தின் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் விழுங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் 60 ஆயிரம் ஏக்கரில் படையினர் வசம் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் வரையில் படையினர் வசமுள்ளது.
படை வசமுள்ளதாக நல்லிணக்க செயலணி கூறிய 9148 ஏக்கர் நிலங்களும் தனியாருக்கும் அரசிற்கும் சொந்தமான நிலங்களாகும் முல்லைத் தீவு மாவட்டத்தினைப் பொருத்த மட்டில் 60 வீதமான பகுதி வனவளத் திணைக்களத்தின் ஆளுகையின் உள்ளது. அவ்வாறுள்ள பகுதிகளிலும் நிலைகொண்டுள்ள படையினரின் நிலப்பகுதிகள் தொடர்பில் இங்கே காட்டப்படவேயில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தினில் மட்டும் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் பாரிய படை முகாம்களாக 5 நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila