மன்னிப்பு மூலம் தமிழ் தேசியத்தை சிதைக்க முயற்சி!

sachithanantham
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்றை தவறாக திரிபுபடுத்தி தமிழ் தேசியத்தை பிளவுப்படுத்த சில சக்திகளால் மேற்கொள்ளப்படும் சதிகள் தொடர்பினில் ஈழம் சிவசேனை அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தினில் அதன் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இன்று புதன்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் எதோவொரு சந்தர்ப்பத்தினில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்றை தவறாக திரிபுபடுத்தி தமிழ் தேசியத்தை பிளவுப்படுத்த முற்பட்டுள்ள சக்திகள் சில முதலமைச்சரினை பொதுமன்னிப்பு கோரவைக்க முற்படுகின்றன.உண்மையினில் யேசுபிரான் ஒரு கன்னத்தினில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பிக்க சொன்னவர். ஆனால் அவர் பெயரினில் முதலமைச்சரினை மன்னிப்பு கோரவைக்க அறிக்கை விடுபவர்கள் யேசுபிரானின் விசுவாசிகளாக இருக்கமாட்டார்களெனவும் அவர் தெரிவித்தார்.
உண்மையினில் இந்துக்கள்,கிறீஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழும் நிலையினில் முதலமைச்சரை மதரீதியாக ஓரங்கட்டுவதன் மூலம் தமிழ் தேசியத்தை சிதைக்க சிலர் முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்காக எங்களை போன்றவர்களினை மதவெறியர்களாக அடையாளப்படுத்த வேண்டாம்.நான் யேசுவை மதிப்பவன்.அவரது அன்பு மற்றும் மனித நேயம் தொடர்பினில் விருப்பங்கொண்டவன்.ஆனால் அவர் பெயரினில் ஒருசில தரப்புக்கள் தமிழ் தேசியத்தை சிதைக்க மதரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்படுவதையே கண்டிப்பதாகவும்; ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila