காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அரசின் விசாரணை அறிக்கை எங்கே? வெளியிட வலியுறுத்துகிறார் விக்னேஸ்வரன்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரைகாலமும் அரசு மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாவட்ட பிரதி நிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும்இடையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அக் கலந்து ரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்படி தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பலவிதமான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று கொண்டு வருகிறது. இவை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தீர்வுகள்  தாமதமடைவ தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு தீர்வு பெற உடனே அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஆராயப்பட்டது. 

  அதாவது இதுவரை காலமும் அரசு பல ஆணைக்குழுக்கள் மூலம்  தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தாலும்  அவற்றின் அறிக்கைகள் பெறப்படவில்லை. பரணகம, திஸ்ஸ விதாரண போன்ற ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பெறப்பட வேண்டும். 

ஏனென்றால் எமது மக்கள் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களிடம் அளிக்கப்பட்ட சாட்சியம் எந்த அளவுக்கு அவ் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது, ஏற்கப்பட்டுள் ளது என்பது தொடர்பில்  எதுவும் தெரியாத வகையில் மக்கள் இருக்கிறார்கள்  என்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.  

மேலும் எந்த அடிப்படையில் தற்போதிலிருந்து நாம் முன்செல்வது எனவும் ஆராயப்பட்டது. 
இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான உத்தியோகபூர்வ தரவுகள் விபரங்கள் பெறப்படவில்லை. எவ்வாறு உத்தியோகபூர்வ அறிக்கையை பெறலாம் என ஆராயப்பட்டது. அதற்கான தரவுக ளும் இக்கலந்துரையாடலில் தரப்பட்டது. 

இவற்றை அடிப்படையாக வைத்து எந்த அடிப்படையில் எவ்வாறான  நடவடிக்கை  இடம்பெறவேண்டும் என்பது தொடர்பில் விரைவில் ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எடுத்துக்கூறவுள்ளேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila