
சிங்கள வாக்காளர்கள் இரகசியமான முறையில் தமிழ் தாயகப் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வவுனியா மாவட்டம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும் அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களில் சிங்கள மொழிபேசும் உத்தியோகத்தர்களை நியமித்து, தமது நிகழ்ச்சி நிரலை அவர்கள் அமுல்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த எல்லைக் கிராமத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராசா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.