நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருந்த மாகாணசபை உறுப்பினர் என்கிற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்காது இழுத்தடித்து வருகின்ற உறுப்பினர் அஸ்மினுக்கு இஸ்லாமிய மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன,
வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியதன் அடிப்படையில் இரண்டு உறுப்புரிமைகள் மேலதிகமாக கிடைக்கப்பெற்றன.
அவற்றில் ஒன்றினை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் வருடாந்தம் பகிர்ந்து கொள்வது என்றும் மற்றைய ஆசனத்தை முஸ்லிம் மக்களுடனான இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்த இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதென்றும் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.
குறித்த தீர்மானத்துக்கு அமைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினைச் சேர்ந்த அ.அஸ்மின் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவருடைய உறுப்புரிமையை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு வழங்கும்படி அஸ்மினுக்கு அந்த அமைப்பு வலியுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கின்றது.
இருப்பினும் அவருடைய உறுப்புரிமையை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு வழங்கும்படி அஸ்மினுக்கு அந்த அமைப்பு வலியுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கின்றது.
ஆனாலும் அதற்கு இடம்கொடுக்க மறுக்கின்ற அஸ்மின் இழுத்தடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றமை இஸ்லாமிய மக்கள் மத்தியில் விசனத்தை வெளிப்படுத்திவருகின்ற நிலையில் Ansar Aboo என்பவர் பகிரங்க மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐயூப் அஸ்மின் ( வட மாகாண சபை உறுப்பினர் ) அவர்களுக்கு பகிரங்க கடிதம்!
சகோதரரே,
தங்களை வட மாகாண சபை உறுப்பினராக நியமித்த NFGG கட்சியின் மீளழைப்பு தீர்மானத்தையும் அது தொடர்பாக நீங்கள் உங்கள் முக நூலில் தெரிவித்திருந்த கருத்துக்களையும் பார்த்தேன். அது தொடர்பில் என்னுடைய இரண்டு அவதானங்களை சொல்ல விரும்புகிறேன்.
அவதானம் 1:
உங்கள் முகநூல் பதிவில் உங்கள் தலைமைத்துவ சபையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சொல்லிவிட்டு பின்னர் உங்கள் இறுதி முடிவை அதற்கான நியாயங்களுடன் அறிவிப்பதாக சொல்லியிருந்தீர்கள். உங்கள் இந்த பதிவில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. அதாவது தலைமைத்துவ சபையின் தீர்மானத்திற்கு கட்டுப்படத் நீங்கள் தயாராக இல்லை. ஏனெனில் அவ்வாறு அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்கான நியாயங்கள் எதனையும் சொல்லவேண்டியதில்லை. அதேநேரம் உங்களது கட்சியின் முடிவுக்கு மாற்றமாக நடந்து கொண்டால் மாத்திரமே அந்த விளக்கம் அவசியப்படும். ஆக பதவியை பாதுகாக்க எல்லோரும் செய்வது போலவே நீங்களும் உங்ககள் கட்சியின் தீர்மானத்தை மீறி பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏதோ விளக்கம் சொல்லத் தயாராகிக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்விடயத்தில் ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும். அதாவது உங்கள் கட்சியின் கொள்கைகளை நான் அறிந்துள்ளேன். தலைமைத்துவ சபை பதவியில் இருக்கும் ஒருவரை மீளழைக்கும் போது எவ்வித சாட்டுப்போக்கும் சொல்லாமல் உடனடியாகவே அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை நிபந்தனையாகும். இதனை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயேதான், அப்பதவி உங்களுக்கும் வழங்கப்பட்டது. எல்லாவற்றையும் விட ‘நான் பதவி விடயத்தில் கட்சியின் தீர்மானத்திற்கு உடனடியாக ஒத்துழைப்பு வழங்குவேன்’ என அல்லாஹ்வின் பெயரால் மக்களின் முன்னால் சத்திய வாக்குறுதிகளை வழங்கினீர்கள்.
இப்போது அந்த சத்தியத்தை மீறும் பாவத்தையும் செய்வதற்கு நீங்கள் தயாராகி விட்டதாகவே எண்ணி கவலைப்படுகின்றேன். இது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள் வழமையனவைதான். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உங்காளது விடத்தை பொறுத்த வரையில் இரண்டு காரனங்களினால் ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது.
முதாலவது ,உங்கள் கட்சி இன்று நடைமுறை அரசியல் பின்னடைவுகளுக்கு தீர்வுகளை உருவாக்கி முன்மாதிரியான அரசியலை செய்வதாக சொல்கின்ற கட்சி. அதில் ‘மீளழைத்தல்’ என்பது அவர்கள் சொல்லும் முன்மாதிரிகளில் ஒன்று. எனவே இந்தக் கட்சியிலுமா இப்படி நடக்கும் என்று ஆச்சரியமாக இருக்கின்றது. )இருப்பினும் , இன்னுமொன்றும் புரிகிறது. அதாவது, ஒரு கொள்கை அடிப்படையான கட்சி என்ற வகையில் உங்கள் கட்சி நடந்து கொள்வதில் உறுதியாக இருக்கிறது. ஆனால், அதனை மதித்து அதன்படி நடந்து கொள்ள நீங்கள் தாயாராக இல்லை.)
இரண்டாவதாக , நீங்கள் ஜாமியா நளீமிய்யாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு உலமா. அத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் இளைஞர் தஹ்வா பிரிவுக்கு தலைமை தாங்கிய ஒருவர் . எனவே நிறைய முன்மாதிரிகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டன ஆனால் பதவி ஆசையின் காரணமாக (இதைவிட வேறு காரணாம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில், உங்களை மீளழைத்து விட்டு இன்னுமொரு வடமாகாண முஸ்லிம, ஒருவரையே நியமிப்பதாக உங்கள் கட்சி சொல்கின்றது) அல்லாஹ்வின் பெயரால் செய்த சத்தியத்தை மீறுவதற்கு நீங்களும் தயாராகி விட்டீர்களா ? என நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. உங்கள் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருகின்றன. இந்த அற்ப விடயத்திற்காக பள்ளிவாயலில் வைத்து அல்லாஹ்வின் பெயரால் செய்து கொடுத்த சத்தியத்தை மீறுகின்ற பெரும் பாவத்தை செய்து விடாதீர்கள் .
அவதானம் 2:
உங்கள் முகநூல் பதிவிலே இன்னும் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதாவது இறுதிமுடிவை எட்டப்படும் வரை யாரும் பொய்யான செய்திகளை, கற்பனைகளை, விமர்சனங்களை எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தீர்கள். இந்த உபதேசங்களை உங்களுக்குத்தான் நீங்கள் செய்ய வேண்டிருக்கிறது. ஏனெனில் இந்த விடயங்கள் தொடர்பில் போலியான விமர்சன பரப்புரைகளை நீங்களே அதிகம் செய்கின்றீர்கள் என நம்புகின்றேன். அதற்கான ஒரு ஆதாரத்தையும் நான் இங்கு சொல்கிறேன். சில தினங்களுக்கு முன்னர், முன்னால் TNA கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம் சொன்னதாக தெரிவித்து உங்களுக்கு சார்பான ஒரு செய்தியினை எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தீர்கள்.
நீங்களே தனிப்பட்ட முறையில் சில ஊடகங்களுக்கு தொலைபேசியில் அழைத்து அதனை பிரசுரிக்குமாறு கேட்டிருந்தீர்கள். பின்னர் இமாம் என்பவர் தான் அவ்வாறு செய்யவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்த செய்தி வெளியான போது அதையும் பிரசுரிக்க வேண்டாம் என நீங்களே தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறீர்கள். ஆக இவ்விடயம் தொடர்பில் நீங்கள்தான் இவ்வாறான ‘திருவிளையாடல்களை’ செய்கின்றீர்கள். உங்களின் செய்திகளை அனுப்புகின்றவர்களே பல போலியான முகநூல் கணக்குகளை வைத்துக் கொண்டு நீங்களே எழுதிக் கொடுக்கும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றரார்.
எனவே உங்கள் முகநூல் பதிவில் சொன்ன உபதேசத்தை முதலில் நீங்களும், அடுத்ததாக உங்கள் கட்டளையில் இயங்குபவர்களையும் பின்பற்றச்சொல்லுங்கள். இறுதியாக பதவி ஆசை, பொருள் ஆசை, மற்றும் புகழ் ஆசை என்பன எல்லா மனிதர்களிடத்திலும் காணப்படும் பலவீனங்களே. அதனால், நமது அரசியல் சீரழிந்து சின்னாபின்னமாகி போய்யுள்ளது. இந்த பலவீனங்களையெல்லாம் இறையச்சம் என்ற ஆயுதத்தின் மூலமாகவே வெற்றி கொள்ள முடியும். இந்த பலவீனங்களையெல்லாம் வெற்றி கொண்டு வாக்கறுதிகளை காப்பாற்றுகின்ற பண்பு உங்களிடம் இருக்கும் என இன்னமும் நம்புகின்றோம். அல்லாஹ்வை பயந்து அமானிதத்தை பேணுகின்ற ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம். இதனை ஒரு மாகாண சபை உறுப்பினராக உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. மாறாக ஜாமியா நளீமிய்யா என்கின்ற முற்போக்கு இஸ்லாமிய கலாசாலையில் கற்றுத்தேர்ந்த பல முன்மாதிரிகளை பேசிய ஒரு உலமா என்ற அடிப்படையிலேயே உங்களிடம் இது எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும் !