2017இல் கலந்து கொண்டவர் 2018இல் புறக்கணித்தது ஏன்?ஊழிக்காஆட்டம் லத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஆடும் ஆட்டத்துக்கு கணக்கே இல்லை என்றா யிற்று. ஊழிக்காலத்து ஆட்டம் இதுதானோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இதைதனிப்பட்ட முறையில் எந் தக் கோபமும் கிடையாது.இதை நாம் சொல்லும்போது கூட்டமைப்பு மீது உங்களுக்கென்ன கோபம் என்று நீங்கள் யாரேனும் கேட்டால், தனிப்பட்ட முறையில் எந் தக் கோபமும் கிடையாது.

மாறாக எங்கள் இனம் என்று சிந்திக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற திருகுதாளம் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லை.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இந்த நாட்டின் 69ஆவது சுதந்திர தினம் நடைபெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் பட்டுவேட்டி கட்டி, நசனல் அணி ந்து, உத்தரிய மடிப்புச் சால்வையுடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டார்.

சுதந்திர தின நிகழ்வில் இரா.சம்பந்தர் கலந்து கொண்டார் என்றதும் தமிழ் மக்கள் அதிர்ந்து போயினர்.

சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை; காணாமல்போன  உறவி னர்களின் கண்ணீருக்கு இன்னும் பதில் இல்லை.

நிலைமை இப்படியாக இருக்கையில், இரா.சம்பந்தர் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம், தமிழ் மக்கள் சுதந்திர தின நிகழ்வை ஏற்றுக் கொள்வதாகவும் தமக் கும் சுதந்திரத்தின் அனுகூலங்கள் கிடைத்து விட்டதாகவும் கருதுவதான ஒரு தோற்றப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.

நிலைமை இதுவாக இருக்கையில், நாட் டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று நடைபெற்றபோது, அதில் இரா.சம்பந்தர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் எனும்போது அதுவும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியாகவே அமைந்தது.

கடந்த வருடம் சுதந்திர தின நிகழ்வில் கல ந்து கொண்டவர் இந்த வருடம் அதைப் புறக் கணித்தது ஏன்? என்பதுதான் தமிழ் மக்களி டம் அதிர்ச்சி ஏற்படக் காரணம்.

அட! இந்த வருடம் உள்ளூராட்சி சபைத் தேர் தல் நடைபெறப்போகிறதல்லவா? ஆகையால் தமிழ் மக்களின்  வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, தாங்கள் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்ததான ஒரு காட்டாப்புத்தான் இது.

பார்த்தீர்களா? தமிழ் மக்களை எப்படி யயல் லாம் கூட்டமைப்பின் தலைமை ஏமாற்றுகிறது என்று. சரி இதுதான் ஒருபுறம் என்றால், பிணைமுறி மோசடி குறித்த விவாதத்திலும் இரா.சம்பந்தர் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். 

இந்த நாட்டில் நடந்த மிகப்பெரியதொரு ஊழல் மோசடி என்று கருதப்படும் பிணைமுறி விவகாரத்தில் இரா.சம்பந்தர் கலந்து கொள்ள மறுப்பது ஏன்? இங்குதான் தமிழ் மக்கள் ஆழ மாகச் சிந்திக்க வேண்டிய கட்டம் ஏற்படுகிறது.

இவற்றையயல்லாம் ஆராய்ந்து தமிழ் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்காத வரை எங்கள் இனத்தைப் பிடித்த பேய் போயகலாது என்பதே உண்மை.   

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila