போர்க்காலச் சூழலுக்கு தமிழ் மக்களை கொண்டு செல்கின்றனர்

நாட்டில் இப்போது இயல்புநிலை திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலும் 2009ஆம் ஆண்டுக்குப் பின் னர் வன்னி பெருநிலப்பரப்பிலும் பொதுமக்கள் மீதான படையினரின் சோதனை நடவடிக்கை கடுமையாக இருந்தது.

எனினும் இயல்புநிலை ஏற்பட இராணுவ சோதனைச் சாவடிகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் மீதான சோதனை நடவடிக்கைகளும் குறைந்து போனது.

நிலைமை இவ்வாறாக இருக்கையில், அண்மையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற பொதுமக் களை பொலிஸார் கடுமையாகச் சோதனை செய்ததுடன் விசேட அதிரடிப் படையினர் பிரசாரக் கூட்ட மேடைகளைச் சுற்றிப் பலத்த பாது காப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போயினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்துள்ளோமா அல்லது  ஆட்சித் தலைவர்கள் வருகின்ற கூட்டத்துக்கு வந்துள்ளோமா என்ற ஐயமும் பொதுமக்களிடம் எழுந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்துக்காக வந்திருக்கும் எங்களைப் பொலிஸார் கடுமையாகச் சோதனையிட்டமை எதற்கானது என ஒருவரை ஒருவர் பார்த்து குறியீட்டு மொழியால் வினவிக் கொண்டனராயினும் சோதனைக்கான காரணம் தெரியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்காக பொதுமக்கள் சோதிக்கப்பட்டனரா என்றால்,

அவர்கள் இருவரும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குச் சென்றவர்கள்.

இப்போதும் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கவே வந்திருக்கின்றனர். அப்படியானால் சோதனை நடவடிக்கை எதற்கானது?

இந்தக் கேள்வி இதுவரை விடை காண முடி யாததாக இருந்தாலும்,

பொலிஸாரின் சோதனை நடவடிக்கையானது ஒரு யுத்த சூழ்நிலையில் தமிழ் மக்களை வைத்திருக்க வேண்டும். 

அவ்வாறு வைத்திருந்தால் மட்டுமே மக்கள் தங்களுக்கு வாக்களிப்பர் என்ற ஒரே காரணத்துக்காகவே இச்சோதனை நடவடிக்கை என்பதைத் தவிர வேறு எதனையும் ஊகிக்க முடியவில்லை.

எதுஎவ்வாறாயினும் நாமே வாக்களித்து நாமே அவர்களைப் பதவியில் இருத்திவிட்டு இப்போது சோதனைக்காகக் கையை உயர்த்துவது என்றால்,

தொடர்ந்தும் இவர்களை அரசியல் பதவிகளில் வைத்திருந்தால் நிலைமை என்னவா கும் என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்பியதாகவும் அறிய முடிகின்றது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila