வடக்கில் இன்றைய நாளும் மற்றொரு சாதாரண நாளே!


ka3

இலங்கையின் வடபுலத்தில் வழமையானதொரு நாள் போன்றே இம்முறையும் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வு கடந்து போயுள்ளது.அரச அலுவலகங்களில் நேரகாலத்;துடன் ஒன்றிரண்டு பணியாளர்களுடன் அவசர அவசரமாக ஏற்றப்பட்ட இலங்கை கொடி ஏற்றப்பட்டதுடன் அவை இழுத்து மூடப்பட்டிருந்தது.
வடமாகாணசபை அலுவலகங்களிலும் இதே கதைதான நடந்தேறியது.வடமாகாண தலைமை செயலகத்தில் பிரதம செயலாளர் பத்திநாதர் கொடியேற்றினார்.பத்திற்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே பங்கெடுத்திருந்தனர்.முதலமைச்சர் நிகழ்வில் பங்கெடுத்திருக்கவில்லை.
யாழ் மாவட்டத்திற்கான பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
ka2
இராணுவத்தினர் கடற்படையினர் விமானப்படையினர் மற்றும் பொலிசாரின் அணுவகுப்புகள் மற்றும் சமய கலை கலாச்சாரங்களை அடையாளப்படுத்தும்விதமான ஊர்வலங்களும் இடம்பெற்றன. நாட்டிற்காக தமது இன்னுயிர்களை தியாகம்செய்த அனைவருக்கும் என குறிப்பிட்டே மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ka1
அத்துடன் 70வது சுதந்திரதினத்தை அடையாளப்படுத்தும் விதமாக மரக்கன்றுகளும் பிரதம விருந்தினர்களால் நாட்டிவைக்கப்பட்டது. அரச,அதிகாரிகள்,அலுவலர்கள்,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் மற்றுமெர்ரு சாதாரணநாளாக இன்றும் கடந்து சென்றுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila