முஸ்லீம்கள் மீதான தாக்குதலிற்கு தமிழ் தரப்பு கண்டனம்!


kan5

கண்டியிலும்,அம்பாறையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை வடகிழக்கை சேர்ந்த சிவில் அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளன.
கண்டியிலும் அம்பாறையில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள பூர்வாங்க அறிக்கைகள் நடவடிக்கை எடுக்காத தவறால் இலங்கை காவல்துறையும்; இந்த வன்முறையில் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதை உணர்த்தி நிற்வதாகவும் அமை குற்றஞ்சாட்டியுள்ளன.
வடக்கு கிழக்கில் பணியாற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களான நாம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் இவ்வன்முறை தொடர்பில் பெரும் கவலைகொள்கிறோம். இந்த அரசாங்கம் முந்தைய ஆட்சியில் அளுத்கமவில் நடந்தேறிய முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற சம்பவங்கள் இனிமேல் இடம்பெறா என்றவாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தன. ஆட்சிக்கு வந்ததுடன் அளுத்கமவில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய தவறியிருக்கிறது. அதனாலேயே இன்று கண்டியிலும், அம்பாறையிலும் அதற்கு முன்னர் காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி இருக்கின்றன. வன்முறைகள் பரவாதவாறும் வன்முறைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதும் அரசாங்கம் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகள் ஆகும்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு மத்தியில் அதிகரித்துவரும் முஸ்லீம் மக்கள் தொடர்பிலான அச்சம், வெறுப்பு மனப்பான்மை தொடர்பிலும் நாம் பெரிதும் அச்சம் கொள்கிறோம். அத்தகைய அச்சமானது இவ்வன்முறைக்கு தேவையான சூழலைமவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இத்தகைய மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கரும மாற்றவேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு இக்கட்டான வேளையில் எமது சகோதரத்துவத்தை தெரிவித்துக் கொள்வதோடு சமூகங்களுக்கிடையிலான அச்ச உணர்வுகளைக் களைவதற்கு சேர்ந்து பணியாற்ற எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வன்முறைகளுக்கு காரணமான பொறுப்புக்கூறாத்தனத்திற்கு எதிராக செயலாற்ற உறுதி பூணுகிறோமென தெரிவித்துள்ளன.
இக்கூட்டு அறிக்கையில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila