ஐ.நா செயலரின் கவலை இறந்த தமிழர்களை உயிர்ப்பிக்குமா?


இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த இறுதி யுத்தத்தைத் தடுப்பதற்கு ஐ.நா சபை தயாராக இருக்கவில்லை என்பதை ஐக் கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தைத் தடுப்பதற்கு ஐ.நா சபை தயாராக இருக்க வில்லை என்பதற்கு அப்பால், யுத்தத்தின் பின் னரான பொறுப்புக்கூறலை ஐ.நா சபை உரிய முறையில் கையாளவில்லை என்றும் ஐ.நா செயலாளர் நாயகம் கூறியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் இறுதி யுத்தம் நடந்தபோது அதில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற னர் என்ற தகவலை ஐ.நா சபை மிகத் தெளி வாக அறிந்திருந்தது.

தவிர, வன்னி யுத்தம் நடந்தபோது தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு கோரி புலம்பெயர் தமிழ் மக்களும் சர்வதேச மனிதநேய அமைப் புக்களும் ஐ.நா சபையை நோக்கி நடந்து சென்று தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

ஆனால், அப்பாவித் தமிழ் மக்கள் வன்னி யுத் தத்தில் கொல்லப்படுவது குறித்து ஐ.நா சபை இம்மியும் கருசனை கொள்ளாமல் இருந்த தென்பதே உண்மை.
வன்னி யுத்தத்தின்போது அங்கிருந்த ஐ.நா மனிதநேய அமைப்புகளையும் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் உடனடியாக வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது.

இலங்கை அரசின் உத்தரவை அடுத்து உட னடியாகவே மூட்டை முடிச்சுக்களை கட்டிய மனிதநேய அமைப்புக்களைப் பார்த்து எங்க ளைக் காப்பாற்றுங்கள், எங்களை விட்டுவிட்டு போய்விடாதீர்கள், இலங்கைப் படை எங்க ளைக் கொன்றுவிடப் போகிறது எனக் கும்பிட்டு மன்றாடிக் கேட்டபோதும் மக்களை உதாசீனம் செய்துவிட்டு ஐ.நா அமைப்புக்கள் வெளிக்கிட் டனர்.

இதன்போது தமிழ் மக்கள் ஓர் உண்மை யைப் புரிந்து கொண்டனர். அந்த உண்மை தமிழ் மக்களைக் கொல்வதற்கு ஐ.நா சபை யும் ஏதோவொரு வகையில் உதவுகிறது என் பதுதான்.
வன்னியில் இறுதி யுத்தம் நடந்தபோது ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் என்ற பதவியை பான் கீ மூன் வகித்திருந்தார்.
யுத்தத்தால் நடக்கும் அத்தனை அழிவுகளை யும் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் பான் கீ மூன் மிகத் துல்லியமாக அறிந்தும் இருந் தார்.
ஆயினும் அவர் ஐ.நா சபையின் செயலா ளர் நாயகம் என்ற பதவிக்கு எந்தவகையிலும் பொருத்தமற்றவராகவே செயற்பட்டார்.

இலங்கைக்கு அவர் வருகை தந்து யுத்தம் நடந்த வன்னிப் பிரதேசத்தை உலங்குவானூர் தியில் இருந்தவாறு தன் காமாளைக் கண்ணால் பார்த்திருந்தாராயினும் இலங்கை அரசின் வரவேற்பில் அவர் நெகிழ்ந்தாரேயன்றி,
அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத் தாகக் கொல்லப்பட்டது குறித்து அவர் இம்மி யும் இரக்கப்படவில்லை.

ஆக, ஐ.நாவின் தற்போதைய செயலாளர் நாயகம் கூறிய; இறுதி யுத்தத்தைத் தடுக்க ஐ.நா தயாராக இருக்கவில்லை என்பதைத் திருத்தம் செய்து,
ஐ.நாவின் நேர்மைத்தன்மை விலைபோன தால்தான் இலங்கையில் தமிழ் மக்கள் கொல் லப்பட்டனர் எனக் கூறுவதே பொருத்தமுடைய தாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila