சிறிலங்கா அரச தலைவரின் தலைமையில்...

சிறிலங்கா அரச தலைவரின் தலைமையில் வடக்கில் தமிழருக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக் கைகள் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்தி ருப்பதாக வடமாகாணசபையில் இன்று (26.05.2018) கடுமையான குற்றச் சாட் டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வடமாகாண சபையின் 125 ஆவது அம ர்வு  பேரவை செயலகத்தின் சபா மண்ட பத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், சிறிலங்கா அரச தலைவர் மைத்ரி பால சிறிசேனவின் முழுமையான ஆதரவுட னேயே இந் நடவடிக்கைகள் இடம்பெறு வதாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன.

முல்லைத்தீவூ மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக் கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விரிவான தரவுகளுடன் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக வட மாகாணத்திலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண விவ சாய அமைச்சர் கசிவநேசன் குற்றம்சாட்டினார்.

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலேயே வட மாகாணத்தில் மக்களின் காணிகள் பெரும் எடுப்பில் அபகரிக்கப்பட்டு வருவ தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ் மின் குற்றம்சாட்டினார்.

இதனால் அவரிடம் நில அபகரிப்பு தொடர்பில் முறையிடுவதில் அர்த்த மில்லை என்றும் அஸ்மின் தெரிவித்தார். சிறிலங்கா அரச தலைவர் மீதான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அயூப் அஸ்மினின் குற்றச் சாட் டுக்கு பதிலளித்து உரையாற்றிய எதிர்கட்சியான ஈபி.டி.பி உறுப்பினர் கூட் டமைப்பே ஆதரவு அளித்து தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிபீடம் ஏற்றி யதாக குறிப்பிட்டதுடன், அதனால் அவரது செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பும் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சயந்தன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த அவையில் கருத்துத் தெரி வித்த சிவாஜிலிங்கம், சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான பாது காப்பு அரணாகவே வன இலாக அதிகாரிகள் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து வருவதாக குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila