மன்னார் புதைகுழியில் சிறுவர்களும்:இழுத்து மூட அரசு மும்முரம்!

மன்னாரிலுள்ள புதிய மனிதப்புதைகுழியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் முப்பது நபர்களை கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சதோச பல்பொருள் விற்பனைத்தளத்தில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தோண்டப்பட்டதையடுத்து இதனை கண்டறிந்துள்ளதாக தடயவியல் அதிகாரிகள் மற்றும் மரபணுவியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே அரசு போதிய நிதியை ஒதுக்காமையினால் அகழ்வாராய்ச்சிகள் நிறுத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் காணாமல் போனோரது உடல வன்கூடுகளேயிதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.இதில் சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுடையதாகவே இருக்கலாமென கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த திங்கள் கிழமை (25) மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், எதிர்காலத்தில் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிகாரிகள் தவறிவிட்டால் அகழ்வாராய்ச்சியினை கைவிடுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை என முடிவு செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட நீதிபதி டி.ஜே. பிரபாகரனால் நியமிக்கப்பட்ட சந்திப்பில் பிரதான விசாரணை நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) சமிந்த இராஜபக்ச மற்றும் மரபணுவியல் நிபுணரான ராஜ் சோமதேவா கலந்து கொண்டனர்.

விசாரணைகளில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் அரசாங்க அதிகாரிகள் இன்னும் இதுவரை நீதிமன்றத்தில் இருந்து 300 கி.மீ தூரத்திலுள்ள தூர இடங்களிலிருந்து பயணித்து மன்னார் வருகின்றனர். நீதித்துறையானது மருத்துவ அதிகாரிகள், மரபணு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடயவியல் ஆய்வாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதாக கூறுகின்றது. 

கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து மன்னாரைப் பயணிப்பவர்களுக்கான விடுதி மற்றும் போக்குவரத்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என நீதிபதி எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்" என பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

நான் சுகாதார துறையில் வேலை செய்தாலும் விசாரணை கட்டளைகள் நீதிமன்றத்தாலேயே வழங்கப்படுகிறது. எனவே, வசதிகள் வழங்குவதற்கு நீதி அமைச்சினை கேட்டுக் கொண்டேன். எனக்கு பதில் இல்லை. எல்லோரும் பிரச்சினையை காட்டி தப்பி வருகிறார்களென குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதனிடையே ஆய்வை தொடர உள்ளூர் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் நிதி ஒதுக்கி வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். அரசு நிறுவனங்கள் அல்லாத நன்கொடைகளை நன்கொடையாக ஏற்க மறுத்துவிட்டனர்.

"மன்னார் ஆயர் இல்லமும்; பல குருமார்களும் தேவையான நிதி மற்றும் வசதிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். அது நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே எந்தவொரு உள்ளூர் அல்லது சர்வதேச அரசு சாரா நிறுவனங்களாலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், அவர்களின் நலன்களுக்காக பணியாற்றும் அறிக்கையை தயாரிப்போம் என்று நாங்கள் குற்றம் சாட்டப்படுவோம், எனவே நிதியேற்பாட்டை வழங்க அரசாங்கம் தயங்கினால், ஆய்வினை கைவிடுவதை விட வேறு வழி இல்லையெனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila