பகை கொண்டவர்களும் ஒன்றுகூடிய நூல் வெளியீடு


வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் கடந்த காலங்களில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல் நேற்றைய தினம் வெளியீடு செய்யப்பட்டது. நீதியரசர் பேசுகிறார் என்பதாக அந்த நூல் அமைந்திருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கலந்து கொண்டதால், அரசியல் தொடர்பில் ஆர்வம் மிக்கவர்களின் கவனத்தை குறித்த நூல் வெளி யீடு பெரிதும் ஈர்த்துக் கொண்டது எனலாம்.

இரா.சம்பந்தர் அவர்கள் கலந்து கொண் டார்கள் என்பதற்கு அப்பால், வடக்கின் முதல மைச்சருக்கு யாரெல்லாம் உபாதை கொடுத் தார்களோ, யாரெல்லாம் அவரை எதிர்த்தார் களோ அவர்களெல்லாம் நூல் வெளியீட்டுக்கு வந்திருந்தனர்.

இதில் அதிசயம் என்னவெனில் முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதி ராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தவர்கள் நேர காலத்துடனேயே வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தனர்.

நூல் வெளியீட்டு விழா அதுவும் வடக்கின் முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழா எனும் போது அதில் கலந்து கொள்வதில் தவறில்லை என்ற வாதம் ஏற்புடையது.
ஆனால் இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பும் நோக்கோடு இரவோடு இரவாக ஆளுநரின் அலுவலகத்துக்குச் சென்று நம் பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்த வர்கள்; குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தை திட்டமிட்டவர்கள் என அனைவரும் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்ததுதான்.

அதேநேரம் எங்கள் முதலமைச்சர், சி.வி. விக்னேஸ்வரன்தான் என்று முதலமைச்ச ரைத் தாங்கி நின்ற தமிழ் மக்கள் மண்டபத்தின் பின்னாசனங்களில் அமர்ந்திருந்து அரசிய லின் சாதாரணங்களை அசைபோட்டுக் கொண்டனர்.

எதுஎவ்வாறாயினும் முதலமைச்சர் விக் னேஸ்வரனின் நூல் வெளியீடு என்பதற்கு அப்பால், அடுத்து வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்ற வியூகங்களின் அடிப்படையிலும் நூல் வெளி யீட்டு விழாவில் அனைவரும் ஒன்றுகூடுவதற் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதெனலாம்.

எதுஎவ்வாறாயினும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை விலக்கிவிட்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாரை நிறுத்தினாலும் அது வெற்றியைத் தரப்போவ தில்லை என்பதை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு நிறுதிட்டமாக உணர்ந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் முதலமைச்சர் வேட் பாளராக விக்னேஸ்வரன் அவர்களை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கூட்டமைப்பின் காய்நகர்த்தல் அமைந்திருப்பதையும் இவ் விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

கிடைத்த சந்தர்ப்பத்தையயல்லாம் நாச மறுத்தவர்கள் இப்போது தமிழ் மக்களினதும் கட்சியினதும் ஒற்றுமை பற்றிப் பேசுகின்றனர்.
இவ்வாறு தேர்தல் காலங்களில் பேசுவதும் பதவி கிடைத்த பின்பு வேறுவிதமாக நடந்து கொள்வதும் எங்கள் அரசியல்வாதிகளின் பித்தக்கோளாறு என்பதை தமிழ் மக்கள் இனி யும் மறந்துபோக மாட்டார்கள்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila