வவுனியா நகரசபையில் ஏலம் போடாத மரங்கள் கடத்தப்பட்டதா?

வவுனியா நகரசபையில் நேற்றைய தினம் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டிருந்தது.
இந் நிலையில் பல பெறுமதியான பொருட்கள் குறைந்த விலையில் ஏலத்தில் விற்பனையாகியிருந்தது. எனினும் ஏலம் இடம்பெற்றபோது ஒரு தொகுதி பெறுமதி வாய்ந்த மரங்கள் ஏலம் இடம்பெறும் பிரதேசத்தில் இருந்து ஓரமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் பெற வந்த பலரும் குறித்த மரங்கள் ஏலத்தில் போடப்படுமா என கேட்டபோது ஏலத்தில் ஈடுபட்ட நகரசபை உத்தியோகத்தர்கள் சிலர் அது ஏலத்திறகு போடப்படாது என தெரிவித்து மிகவும் பழுதடைந்த மரங்களை ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர்.
எனினும் இரவு 8.30 மணிக்கு நகரசபையினுள் வந்த உத்தியோகத்தர்கள் இருவர் ஏலத்தில் பெற்ற மரங்களுடன் இணைந்து ஏலம் போடப்படாத பெறுமதி மிக்க மரங்களையும் ஏற்றிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நகரசபையின் செயலாளரிடம் கேட்டபோது,
அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும். மக்களுக்கு காட்டாது ஒரு தொகுதி மரங்கள் ஏலத்தில் போடப்பட்டதாகவே தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்ததுடன் ஏலத்தில் போடப்பட்ட பொருட்களை மறுநாள் காலைக்கு முன் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தமையினாலேயே இரவு 8.30 மணிக்கு மரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் களவான மரங்கள் கொண்டு செல்லப்படவில்லை எனவும் அனைத்து ஆவணங்களும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் நகரசபையின் தலைவரிடம் இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது,
பெறுமதி குறைந்த மரங்களை ஏலத்தில் விற்று அவற்றுடன் இணைத்து ஏலத்தில் போடப்படாத மரங்களையும் கொண்டு சென்றதாக அறியகிடைத்துள்ளது.
தற்போது அம் மரங்களையும் இணைத்தே ஏலத்தில் போட்டதாக தெரிவிக்கின்றனர். எனினும் இங்கு கூட்டாக ஒரு விடயம் நடந்துள்ளமை தெரிகின்றது என தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila