வாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே! உறவுகளை இழந்து தவிக்கும் முதியவரின் உள்ளக் குமுறல்

முழுக் குடும்பமுமே குப்பைமேட்டுக்குள் புதைந்து சிதைந்துபோயுள்ளது. பேரன் மட்டுமே உயிருடன் இருக்கின்றான்.
வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எனது போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டது என குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட என்.கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்லயில் குப்பைகொட்ட வேண்டாமென முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை எல்லாம் இவரே தலைமையேற்று நடத்தியுள்ளார்.



இதனால், பொலிஸாரின் தாக்குதல், கண்ணீர்ப் புகைகுண்டுத் தாக்குதல்ஆகியவற்றுக்குள் உள்ளாகியிருந்தார்.
எவ்வளவுதான் நெருக்கடிகள், அழுத்தங்கள் வந்த போதிலும் மக்களுக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், குப்பைமேட்டுக்குள் சிக்கி கீர்த்திரத்னவின் மகள், மருமகன், பேத்தி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவரது மனைவியும் உயிரிழந்துவிட்டார்.
தற்போது அவருக்கென மகளின் மகன் (பேரன்) மாத்திரமே மிஞ்சியுள்ளார். உறவினர்களுக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறும்போது துயரம் தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்துவிட்டார்.
அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் அவர் கடும் சீற்றத்துடனேயே இருக்கின்றார். குப்பைகொட்டி எங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிவிடாதீர்கள் என அழுது புலம்பினோம்.
கெஞ்சிக்கூடப் பார்த்தோம். எமது கோரிக்கைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. ஒரு கிராமத்தின் வாழ்வுக்காக நான் ஆரம்பித்த போராட்டம் இந்த மரணங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பேரன் மட்டும் இல்லாவிட்டால், தற்கொலை குண்டுதாரியாகச் சென்று அரசியல்வாதிகளை அழித்துவிடுவேன்" என்று அவர் கடும் சீற்றத்துடன் குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட என்.கீர்த்திரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila