செல்லாக் காசுகளின் முஸ்லிம் கூத்தமைப்பு ஹக்கீமுக்கு சவாலாகுமா?

ஹக்கீமுக்கும் ஹக்கீம் கட்சிக்கு எதிராகவும் அம்பாறையில் கூத்தடித்து வரும் செல்லாக் காசுகளை முதலில் முஸ்லிம் கூட்டமைப்பு என்பதை நாம் முஸ்லிம் கூத்தமைப்பு என்று எடுத்துக் கொள்வோம்.
ஹக்கீமுக்கும், ஹக்கீம் கட்சிக்கும் எதிராகவும் நான்கு சில்லறை செல்லாக் காசுகள் முஸ்லிம் கூத்தமைப்பு என்னும் ஒரு அமைப்பை உருவாக்கி ஹக்கீமை தோற்கடிக்க வேண்டும் என்று பாரிய திட்டத்தில் களமிறங்கி உள்ளார்கள்.
இந்த கூத்தமைப்பை உருவாக்கும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹசனலி மற்றும் அந்த கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்களாம்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அவ்வாறு முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பு தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டேதான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது என இந்தக் கூத்தமைப்பினர் தெரிவித்துள்ளார்களாம்.
இந்த அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடனான பேச்சுகள் கொழும்பிலும், கிழக்கிலும் இடம்பெற்று வருகின்றதாம் அந்த வகையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவை கடந்த வாரம் எம்.ரி.ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் இருவரும் அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்துள்ளனராம்.
பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன், தலைமைத்துவ சபையின்கீழ் முஸ்லிம் கூத்தமைப்பை ஏற்படுத்துவதற்கு முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாம்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் அரசியல் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பே பலமான சக்தியாகத் திகழும் என்ற விடயம் இன்று அரசியல் ஆய்வாளர்களால் பேசப்பட்டு வருகின்றது.
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதற்குரிய சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சொல்லபப்டுகின்றது.
அடுத்த சந்திப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதுடன், கிழக்கு மாகாண முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்பினர் முஸ்லிம் கூட்டமைப்பை ஆதரித்து களத்தில் இறங்கி செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர்களாம்.
மேலும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய பதவியிலுள்ள ஒருவரும் தனது எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைவதற்குத் தயாராகி வருவதுடன், தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முக்கிய முஸ்லிம் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இணைவதற்கு எதிர்பார்த்துள்ளனர்களாம்.
தமிழ் கூட்டமைப்புடன் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை ஒப்பிட முடியுமா?
தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் என்பவர்கள் கொள்கைவாதிகள்.. கொண்டதே கொள்கை மக்களின் நலனில் எப்போதும், அக்கறை கொண்டவர்கள். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பவர்கள் அரசியல் வியாபாரிகள்.
எந்தப் பக்கம் அதிக இலாபம் பதவி சொகுசு கிடைகின்றதோ அந்தப்பக்கம் ஆதரவு கொடுப்பவர்கள். பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பவர்களுக்கு கொள்கை என்பதே கிடையாது.
முற்று முழுதாக சுயநலம் பதவி பட்டம் சொகுசு. இப்படிப்பட்டவர்கள் எப்படி தமிழ்க் கூட்டமைப்புடன் ஒப்பிட முடியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.
வடகிழக்கில் முஸ்லிகளுக்கு எதிராக பல தரப்பட்ட விடயங்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால் கொள்கை கொண்ட தமிழ்க் கூட்டமைப்புடன் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை கூட செய்ய முடியாத இந்த முஸ்லிம் அரசியல் வியாபார தரப்புக்கள் எப்படி தமிழ்க் கூட்டமைப்புடன் ஒப்பிட முடியும்.
தமிழ் கூட்டமைப்புக்கு வந்த அமைச்சு வாய்ப்பு
மகிந்த ஆட்சி தொட்டு மைத்திரி ஆட்சி வரை பிரதமர் மற்றும் பாதுகாப்பு தவிர்ந்து சபாநாயகர் மற்றும் 4 முழு அமைச்சு 4 பாதி அமைச்சு தேடி வந்தது.
அவைகளை தமிழ்க் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது. தமிழ்க் கூடமைப்பு விரும்பியிருந்தால் இன்னும் 2-3 அமைச்சுகளை பேசி பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் அவைகளை சம்பந்தர் விரும்பவில்லை. இந்த வாய்ப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கிடைத்தால் சொல்லவா வேண்டும்? அமைச்சுக்கு என்றே ஆலாப்பறக்கும் முஸ்லிம் அரசியலுக்கு இப்படி வாய்ப்புக்கள் ஒரு போதும் தேடி வருவதில்லை.
காரணம் முஸ்லிம் அரசியல் என்பது எந்தக் கட்சியுடன் கூட்டு என்று வந்தாலும் அவர்கள் முன்வைக்கும் முதல் கோரிக்கை முழு அமைச்சு மற்றும் 2-3 பாதி அமைச்சு வழங்க வேண்டும் என்பதே.
எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் தான் சார்ந்த சமூக சிந்தனை என்பதே கிடையாது. கண்கெட்டபின்பு சூரிய நமஸ்காரம்.
காலம் கடந்த ஞானம். இந்த ஹசன் அலிக்கும் பஷீர் சேகு தாவுத்துக்கும் ஹக்கீம் இலவச எம்பி கொடுத்திருந்தால் இந்த ஞானோதயம் வந்திருக்குமா?
இந்த இருவரும் இறக்கும் வரைக்கும் ஹக்கீம் இலவச எம்பி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் என்றுமே இருந்தார்கள். இலவச எம்பி இனிமேல் ஹக்கீம் தரமாட்டார் என்ற உறுதியான முடிவுக்கு வந்த பின்னர்தான் இந்த இருவரும் இந்தக் கூத்தமைப்பு என்ற ஒரு காமடியை கொண்டுவர பார்கின்றார்கள்.
இந்த இருவரும் ஹக்கீம் கட்சியில் இலவச எம்பி தொட்டு அமைச்சர் பதவி வரைக்கும் நன்றாக அனுபவித்த போது இந்த சிந்தனை ஒரு போதும் வரவில்லையே!
இப்போது இந்த இருவருக்கும் இலவச எம்பி ஹக்கீம் கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில், கோபத்தில் ஹக்கீமை பழிவாங்க வந்த சிந்தனைதான் இந்தக் கூத்தமைப்பு.
அமைச்சர் றிசாத் அதாவுல்லாஹ் மற்றும் ஹசன் அலி பஷீர் சேகு தாவூத் மற்றும் ஹக்கீமை எதிர்க்கும் எல்லோரும் ஒரு அணியாக நின்று ஹக்கீமை தோற்கடிக்கும் எண்ணமே இந்தக் கூத்தமைப்பு.
ஆனால் இந்தக் கூத்தமைப்பில் அமைச்சர் றிசாத் மட்டுமே பலமாக உள்ளார். உண்மையில் அம்பாறை மாவட்டத்தில் இந்த ஹசன் அலி மற்றும் பஷீர் சேகு தாவூத் ஆகியோர் எந்தப்பக்கம் நின்று பரப்புரையில் இறங்கினாலும் வாக்களிக்க இருக்கும் மக்கள் இவர்களை கண்டால் வாக்களிக்க மாட்டார்கள்.
காரணம் இலவச எம்பி கொடுக்காத ஒரே காரணத்தில்தான் இவர்கள் இந்த கூத்தும் கோமாளியும் என்பது சாதாரண பாமரனுக்கும் தெரிந்த விடயம். ஹசன் அலி அணி என்பது வெறும் சில்லறை செல்லாக் காசு.
இதை நம்பி இன்னும் 2-3 சில்லறைகள். அதிலும் விசேடமாக பாலமுனைக்காரர் தனது அரசியல் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு அரசியல் தற்கொலை செய்யப்போகின்றார்.
ஹசன் அலி பஷீர் சேகு தாவூத் ஆகியோர் ஏறிச்செல்ல ஒரு வண்டி தேடுகின்றார்கள். அந்த வண்டிதான் கூத்தமைப்பு.. இவர்கள் இருவரும் அவர்களின் ஊர்களில் தங்கள் அரசியலை வளர்க்காமல் தங்களையும் வளர்க்காமல் சும்மா டம்மி பீசாக வளம் வந்த செல்லக்காசுகள்.
இப்போது எந்தவொரு பதவியும் இல்லாமல் கூத்தடிப்பது மக்கள் மத்தியில் எடுபடாது என்பது இவர்களுக்கு தெரியாதா..
அம்பாறையில் நாடி நரம்பு நாளம் ரத்தம் மற்றும் உடம்பில் ஊறிப்போன ஹக்கீம் கட்சியை உடைக்க வேறு மார்க்கம் வேறு வழி உள்ளது.. அதை விட்டு சும்மா பூச்சாண்டி காட்டி ஹக்கீமை வீழ்த்த முடியாது.
ஆண்டாண்டுகள் புரண்டாலும் அலுத்து புரண்டாலும் மாண்டோர்கள் வருவதில்லை ஹசன் அலி பஷீர் சேகு தாவூத்.
சும்மா நேரத்தை காலத்தை கடத்தாமல் இந்த இருவரும் இவர்கள் பின்னால் திரியும் சிலரும் ஒதுங்குவது அல்லது மீண்டும் ஹக்கீம் கட்சி அல்லது றிசாத் கட்சியில் இணைந்தால் ஏதாச்சும் கிடைக்கும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் விமான விபத்தில் கொலை செய்யபட்ட விசாரணை அறிக்கை இவ்வளவு காலமும் இந்த பஷீர் சேகு தாவூதுக்கு தெரியாமல் புரியாமல் பொய் விட்டது.
இப்போதுதான் அந்த அறிக்கையை கேட்டு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு கோரிக்கை விட்டுள்ளார். அமைச்சராக இருக்கும் போது அதிகாரத்தில் இருக்கும் போது சும்மா சரி அந்த அறிக்கையை கேட்கவில்லை.
எவ்வவளவு பெரிய ஞானம்.. யாரை ஏமாற்ற இந்த நாடகம். உங்கள் பாட்சா ஹக்கீமிடம் பலிக்காது. ஹக்கீமுக்கு உங்களை நன்றாகவே தெரியும். உங்கள் பலவீனம் அறிந்துதான் உங்களுக்கு ஹக்கீம் ஆப்பு வைத்தார்.
அதாவுல்லாவுக்கு அக்கரைப்பற்று பகுதியில் சற்று ஆதரவு அதிகரித்துள்ளது. அம்பாறை அரசியலில் அதாவுல்லாஹ் மிக முக்கிய பாத்திரம். அவரின் போக்கால் தான் தோற்றார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதாவுல்லா வெற்றி பெற வேண்டிய தேவை ஒரு வெற்றிடமாகவுள்ளது.
அம்பாறையில் றிசாத் அதாவுல்லாஹ் இணைந்தால் ஹக்கீமை தோற்கடிக்கலாம் உண்மைலே றிசாத் மீது ஹக்கீம் பயந்து விட்டார். எப்போது அம்பாறை பக்கமாக றிசாத் வருகை தந்தாலும் றிசாத் பின்னால் ஹக்கீம் வந்து விடுவார்.
அம்பாறையில் றிசாத் ஒரு மாகாணசபை உறுப்பினர் பெற்றாலும் அது பாரிய வெற்றிதான். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அதாவுல்லாஹ் அணிக்கு பாரிய சவால் காத்திருக்கின்றது.
இந்த சவாலை தடுக்க வேண்டுமானால் ரிசாத் அதாவுல்லாஹ் ஒரு அணியில் களம் இறங்க வேண்டும். வாழ்வா சாவா என்ற போராட்டம் போன்று பெருமளவு பணத்தை வாரி இறைத்தால் அந்தப் பணக் கட்சி வெற்றி வெறும்.
பாவம் முஸ்லிம் அரசியலும் அப்படி முஸ்லிம் அரசியல்வாதிகளும் அப்படி முஸ்லிம் வாக்காளர்களும் அப்படி. தமிழ் நாட்டில் போன்று எந்தப் பக்கம் பணம் அதிகம் கிடைக்கின்றதோ அந்த பக்கம் வாக்குகள் அதிகரிக்கும்.
முஸ்லிம் மக்களும் எந்த நோக்கமும் இன்றி கொள்கையும் இன்றி பணத்தைக் கண்டால் வாக்களிப்பார்கள். அதனால் இந்தக் செல்லாக் காசுகள் இல்லாது றிசாத் அதாவுல்லாஹ் இருவரும் இணைந்து எதிர்வரும் கிழக்கு தேர்தலில் 3 மாகாணசபை உறுப்பினர்களை பெறும் வியூகம் வகுக்க வேண்டும்.
றிசாத்தைப் பொறுத்த மட்டில் இந்த செல்லாக் காசுகள் இல்லாது தனியாக நின்று சாதிக்கும் பணபலம் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் றிசாத் முற்றாக முகாமிட்டு நல்ல முறையில் களம் அமைத்து களம் இறங்கினால் 3 உறுப்பினர்களை பெற்று ஹக்கீமுக்கு ஒரு பாரிய அடியை சரிவைக்கொடுக்க முடியும்.
அதை விட்டு கூத்தமைப்பு என்பதெல்லாம் ஹக்கீமுக்கு மீண்டும் வெற்றியை கொடுத்து விடும். கிழக்கு மாகாண தேர்தலில் றிசாத் அணி வெற்றி அடையவில்லை என்றால் றிசாத் அம்பாறை முகாமை மூடுவது நல்லது.
கடந்த போது தேர்தலில். றிசாத் அணியில் முகவரி இல்லாதவர்கள் சமூகத்தில் யார் என்றே தெரியாவர்கள் றிசாத் அணியின் மூலம் பணம் பெற்று தேர்தல் செலவுகள் செய்யாதவர்கள் பணத்தை பதுக்கியவர்கள் இப்படியானவர்களை ஒதுக்கி விட்டு கொஞ்சம் வல்லவர்களை இனம் கண்டு களம் அமைக்க வேண்டும்.
இம்முறை கிழக்கு தேர்தல் நல்ல சூடு பிடிக்கும். றிசாத் ஹக்கீம் மோதல் பலமாக இருக்கும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila