போராளிகளை அசிங்கப்படுத்திய தீபச்செல்வன் – வலுக்கும் எதிர்ப்பு

theepachelvan

மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் குடும்பங்களிலிருந்து ஒருவர்தான்  விளக்கேற்றவேண்டும் என்று மூத்தபோராளி காக்கா அண்ணா அவர்களும் தடுப்பிலிருந்த வந்த போராளிகள் கூட்டமைப்பும் விடுத்தவேண்டுகோளுக்கு கவிஞர் தீபச்செல்வன் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கடந்தவருடம் நாடாளுமன்ற உறுப்பபினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்,   தேசியத் தலைவர் அவர்களின் உரையை தொகுத்து தனதுரையாக்கி வெளியிட்டதோடு மட்டுமல்லாது கனகபுரம் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை தானே ஏற்றவேண்டும் என அடம்பிடித்து ஏற்றியதோடு முழங்காவில் துயிலுமில்லத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை பொதுச் சுடரேற்ற ஒழுங்கமைத்துகொடுத்தார் இதற்கு மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த வருடம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும்  அரசாங்கத்திடம் சலுகைக்களுக்காக உரிமையை விட்டுக்கொடுத்த சிறிதரன் மாவை போன்றவர்கள் பொதுச் சுடரேற்றுவது மாவீரர்களை அவமதிக்கும் செயல் என்று  போராளிகள் இருவேறு ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
இக்கோரிக்கை வைத்த போராளிகளை தமிழ்ச் சமூகத்தால் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும் கடந்த காலத்தில்  மகிந்த ஆதரவுக் குழுக்களுடன் சேர்ந்தியங்கியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள தீபச்செல்வன் அவர்கள் கடந்தவருடம் துயிலுமில்லத்தில் புல்லுப்பிடுங்காதவர்களுக்கு இக்கோரிக்கையை வைக்க அருகதை இல்லை என்றார்.
தீபச்செல்வனின் மேற்படி கருத்துக்களுக்கு சமூகவலைத்தளங்களில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அவரது பதிவுக்கு வந்த எதிர்வினைகளில் சில:
“மக்களும் முன்னாள் போராளிகளும் இந்த மாவீரர் நாள் பிரதான இகைசுடர் ஏற்றுவது தொடர்பிலே ஏன் குழம்புகின்றார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், ஏன் என்றால் காலம் காலமாக இந்த நிகழ்வினை ஈழத்தின் புகழ்பூத்த மாபெரும் வீரம் செறிந்த தளபதிகளே நடத்தி வந்தனர் அவர்கள் யார் என்னறால் எந்த ஒரு ஆசை , பாசம், சொத்து , சுகம் என்பவற்றிற்கு கட்டுபடாமல் மண்மீட்பு என்ற ஒரே இலட்ச்சியத்திற்காக இரவு பகலாக இரத்தமும் சதையுமாக தலைவரின் கீழ் நின்று உழைத்தார்கள் அப்படிப்பட்ட உன்னதமானவர்களையே பார்த்து பழகி வந்த எம்மக்களிற்க்கு அனைத்து சொத்து, சுகங்கள், பாராட்டுகள், பெருமைகள் என்று அனைத்துக்கும் ஆசைப்பட்டு வாழ்ந்துவரும் இந்த அரசியல் வாதிகளை அதே உன்னத பேராளிகளை வைத்த உயர்ந்த இடத்தில் இவர்கள்(அரசியல்வாதிகள்) எப்படிதான் அவர்களை(போராளிகளை) போல பாவனை செய்தாலும் வைத்துப் பார்ப்பது என்பது எம்மக்களுக்கு அவ்வளவு சுலபமான காரியமாக இருக்க போவதில்லை…. அதுவே தற்போதய குழப்ப நிலைக்கு காரணம் அன்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அல்ல…இவர்களது கடந்த மற்றும் தற்கால நடவடிக்கைகள் இன்னும் இன்னும் மக்களிற்க்கு கசப்பினை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன…” – Vasanth Amuthan
——————————————————————————————–
“கவிஞர் தீபச்செல்வனிடம் சில கேள்விகள்
ஒன்று – மாவீரர் குடும்பமோ, அல்லது போராளிக்குடும்பமோ அல்லாத நாடாளுமன்ற உறுப்பினா் சிறிதரன் கடந்த காலம் போன்று இம்முறையும் மாவீரர் நாள் பொதுச் சுடரேற்றுவதனை தாங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.
இரண்டு – மாவீரர் குடும்பமோ, அல்லது போராளிக்குடும்பமோ அல்லாத மாகாண சபை
உறுப்பினா் பசுபதிபிள்ளை அவா்கள் மாவீரர் பணிக்குழுவின் தலைவராக இருப்பதனை தாங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? (இரண்டு மூன்று மாவீரர்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகள் பொறுப்பாளர்கள் என பலர் இருக்கின்றாா்கள்)
மூன்று – ஒரு உன்னத தியாகத்திற்காக விதையானவா்களுக்கான பொதுச் சுடரை போலி அரசியல்வாதிகள் ஏற்றக் கூடாது என யாா் சொன்னால் என்ன அதில் என்ன தவறு இருக்கிறது?
நான்கு – இன்று கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அரசியல் செய்கின்றவா்கள் யாா் என்பது தாங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதாவது பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரனும் அவா்களுடைய கட்சிகார்களும். எனவே நீங்கள் அவா்களை நோக்கி உங்கள் ஆதங்கத்தை முன்வைக்காது தோற்கடிக்கப்பட்ட வெளித்தெரியாது ஒரு தரப்பை நோக்கி கேள்வி எழுப்புவது ஏன்? சிறிதரனின் அரசியலை காப்பாற்றுவதற்காகவா?
ஜந்து – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இராணுவம் எவ்வாறு சென்றது என்பது தங்களுக்கு தெரியாத விடயமல்ல. இருப்பினும் கூறுகின்றேன் கடந்த 2012 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தின் விளைவே அது. அதன் பின்னரே எல்லா துயிலுமில்லங்களிலும் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது (வன்னியில்) இதனை நீங்கள் ஏன் திட்டமிட்டு மறைத்து உங்கள்பதிவினை மேற்கொண்டுள்ளீர்கள். பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரனின் அரசியலை பலப்படுத்தவா?
ஆறு – கிளிநொச்சியை தவிர ஏனைய எந்த மாவீரர் துயிலுமில்லங்களிலும் அரசியல் கட்சி ஒன்று தனது அரசியலுக்காக சென்று ஆதிக்கம் செலுத்தவில்லை. கிளிநொச்சியில் மாத்திரமே இந்த அசிங்கம் நிகழ்கிறது இதனை சுட்டிக்காட்டுபவா்கள் தவறானவா்களாக?
ஏழு – ஏனையவா்களை நோக்கி இராணுவ புலனாய்வாளர்கள், ஆயுதக்குழுக்கள் என விரல் நீட்டுகினக்ற நீங்கள் 2009 க்கு முன் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில், நீங்கள் யாழ் பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்த்தீர்களா, ஊரேழு முகாமுக்கு நீங்கள் சென்றது அவா்களுக்கும உங்களுக்குமான உறவு பற்றி பல்கலைகழக உங்கள் நண்பர்கள் தற்போது உறுதிப்படுத்தி கூறுகின்றாா்கள். அத்தோடு ஈபிடிபி அலுவலகத்திற்கும் உங்களுக்குமான உறவுகள் பற்றியும் உங்கள் நண்பர்கள் கூறுகின்றாா்கள்? இப்படியிருக்க நீங்கள் சிறிதரனை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் போராளிகள் மீது சேறு பூசுவது நியாயமா?
எட்டு – உங்கள் தங்கையை விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேட்பில் இயக்கத்திற்கு இணைத்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக நீங்கள் கவிதை ஒன்றை எழுதியிருந்தீர்கள் அப்போது உங்களின் தேசிய உணர்வு எங்கே போனது?
கவிஞரே எந்த விடயத்தையும் நீங்களும் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று பாருங்கள். ஆய்வு செய்யுங்கள், கருத்துக்களை பகிருங்கள்.”
இப்படிக்கு
சிங்கம்
—————————————————————————————————————————
“தடுப்பில் இருந்து வந்த போராளிகளையோ அல்லது காக்கா அண்ணை போன்றவர்களையோ அரச முகவர்கள் என்று சொல்லவோ அல்லது புல்பிடிங்கினாக்கள் தான் கதைக்கலாம் என்று சொல்வதற்கோ யாருக்கும் அருகதையில்லை. அமைப்பிலிருந்து ஓடி வந்த, சுமந்திரனை கொலைசெய்ய முயற்சித்தார்கள் என்று போராளிகளை சிறையிலடைக்க உதவிய, தெய்வீகன் ஆட்களைக் காட்டிக்கொடுத்த, சிறிதரனுக்கு என்ன தகுதி இருக்கிறது பொதுச் சுடரேற்றுவதற்கு?  தீபச் செல்வன் அவர்களே தேசியத் தலைவரின் உரையை தொகுத்து சிறிதரனின் பெயரைப்போட்டு வாசிக்கச் சொல்லி சிறிதரனை உசுப்பேத்திவிட்ட உங்களைப் போன்றவர்களின் நோக்கம் புரியாமல் இல்லை. நீங்கள் அடிமையாக இருந்து பதவி பெறுங்கோ அது உங்கள் உரிமை ஆனால் போராளிகளைத் துரோகியாக்க முயலும் உங்களைப் போன்றவர்களின் துரோகங்கள் வெளிச்சத்துக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.”  – கலையழகன் கரிகாலன்
————————————————————————————————————————————-
“கவிஞரே நாட்டுக்காக கவிதையும் கட்டுரையும் எழுதினேன் என்று முன்னாள் போராளிகள் சொல்லிக்கொண்டு திரியவில்லை அவா்கள் உயிரை துச்சமென மதித்து துப்பாக்கி தூக்கி களம் நோக்கி சென்றுவா்கள். இன்று இரும்புத் துண்டுகளை சுமந்து வாழ்நுதுகொண்டிருக்கின்றாா்கள். அவா்கள் சிறிதரன் விளகேற்றுவதனை விமர்சிப்பதனை நீங்கள் எவ்வாறு விமர்ச்சிக்க முடியும்?”  – Swiss Singam
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila