உலகின் உன்னத இனம் என்ற பெருமையை இழந்த பின்னும்...


வள்ளுவர் செப்பாத பொருள் எதுவுமில்லை. வள்ளுவத்தைக் கற்றறிந்தால் உலகைக் கற்றறியலாம் என்பது மட்டுமல்ல தர்மத்தின் வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் முடியும்.
1330 குறட்பாக்களில் ஒன்று தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும் என்பதாகும்.
இதன் பொருள், ஒருவரைத் தெளிந்து கொண்டு அவரை உறவாக்க வேண்டும். அவ் வாறு தெளிந்து கொள்ளாமல் உறவாக்கு வதும் தெளிந்து உறவாக்கியவர் மீது ஐயுறவு கொள்வதும் தீராத துன்பத்தைத் தரக் கூடிய தாகும்.
ஆக, இதிலிருந்து வள்ளுவர் கூறுவது எவ ரையும் நன்கு அறியாமல் அவரை உறவாக்கிக் கொள்ளக்கூடாது.

மாறாக ஆராய்ந்து அறிந்து ஒருவரை நட் பாக்கிய பின்னர் அவர் மீது சந்தேகம் கொள் வதாக இருந்தால் அது எப்போதும் துன்பத் தைத் தரும்.
வள்ளுவன் கூறிய இக்குறள் மிகவும் முக் கியமானது. இன்றைய தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைக்கவும், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை வெறுப்படையச் செய்யவும் அப்பட்டமான பொய்ப்பிரசாரங்களை மேற் கொள்ளவும் கடுமையான முயற்சிகள் நடக்கி ன்றன.
ஏன்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி யின்றி தமிழினம் தத்தளிக்கிறது.

எங்களிடம் இனத்தின் பெயரால் ஒற்றுமை இருந்திருக்குமாயின் தமிழ் மக்களை எவரா லும் எதுவும் செய்திருக்க முடியாது.
முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவு தோல்வி என்பதாக அமைவதற்கு எங்கள் இனத்தில் இருந்த காட்டிக் கொடுப்புகளே காரணமாயின.
இயேசுபிரானை அவரோடு கூட இருந்த யூதாஸ் காட்டிக் கொடுத்தான். அதற்காக வெள்ளிக்காசுகள் கொடுக்கப்பட்டன.
பிதாமகனின் வாழ்வில் நடந்த காட்டிக் கொடுப்புகளும் வெள்ளிக் காசுச் சலுகைகளும் மனித இனத்தில் சேர்ந்து கொண்டதாயினும் அது தமிழினத்தில் அதிகமாயிற்றோ என்று எண்ண வேண்டியுள்ளது.

ஆம், எங்கள் விடுதலைப் போராட்டத்தின் அஸ்தமனம் காட்டிக் கொடுப்புக்களாலும் நய வஞ்சகத்தாலும் நடந்தேறின.
இதற்காக அற்ப சொற்ப காசுகள் கைமாறப் பட்டன. இதனால் அவலமாக உயிர்விட்ட எங் கள் உறவுகளின் அழுகுரல்களும் அவல ஓலங் களும் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக் கின்றன.

இந்த உலகில் தமிழர்கள் முதன்மையான வர்கள். அவர்கள் வீரர்கள், தியாகிகள், இனப் பற்றுக் கொண்ட மாமனிதர்கள் என்ற பெருமைக் குரிய இனமாக விழித்துரைக்கப்பட வேண்டிய நம் தமிழினம் அவற்றையயல்லாம் இழந்து,
இன்று வாழத் தெரியாத - சந்தர்ப்ப சூழ் நிலைகளைப் பயன்படுத்தத் தெரியாத இனம் என்று முத்திரையிடப்படுமளவுக்கு எங்கள் ஒற் றுமையீனங்களும் காட்டிக் கொடுப்புகளும் அப் பட்டமான பொய்யுரைகளும் எங்களை அதல பாதாளத்தில் வீழ்த்தியுள்ளன.

இந்தக் கொடுந்துயர் கண்ட பின்பும் எங்கள் உறவுகள் துடிதுடிக்க இறந்த நிட்டூரத்தைப் பார்த்த பின்பும் நாம் திருந்த மறுப்போமாயின் எங்கள் எதிர்காலம் இன்னும் ஆபத்தாகவே அமையும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila