தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி குழுக்களுக்குள் நடந்தது? – (வெளிவராத தகவல்கள்)


arunthavapal

சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் தெரிவில் தமிழரசுக்கட்சிக்குள் பெரும் குத்துப்பாடு நடந்ததை எல்லோரும் அறிந்திருந்தோம். இதை எல்லா ஊடகங்களும் செய்தியாக்கி விட்டன. இந்த குத்துப்பாடு ஏன் நடந்தது? இதற்கான பின்னணி என்ன? வேட்பாளர் மாற்றம் நடந்தது உண்மையா? கள்ளக்கையெழுத்து குற்றச்சாட்டு உண்மையா? அப்படியென்றால் எந்தெந்த பெயர்? இதையெல்லாம் எந்த ஊடகங்களும் சொல்லவில்லை. பொதுவாகவே இப்படியான செய்திகளை யாரும் சொல்வதுமில்லை. தமிழ் பக்கம் அந்த தகவல்களை திரட்டி தருகிறது.
சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு 14ம் திகதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதனால் 13ம் திகதி 1 மணி வரை மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டில் இதற்கான பணிகள் நடந்தன. மாவை சேனாதிராசா, அருந்தவபாலன், சயந்தன், மாவையின் செயலாளர் சுகிர்தன் (முன்னாள் பிரதேசசபை தவிசாளர்) ஆகியோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தென்மராட்சி தமிழரசுக்கட்சியின் கிளைக்குழுவின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுக்களிற்கு உட்படாதவர்களை கொண்ட சிறப்பான பட்டியல் ஒன்றே தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியல் எல்லோருக்கும் பிடித்துப்போக, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேட்பாளர்களை ஆள் அடையாள அட்டையுடன் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திடுமாறு அழைப்பதென முடிவாகியது.
14ம் திகதி 8.30 மணிக்கு வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டிருந்தவர்கள் அடையாள அட்டையுடன் தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். கட்சி பிரமுகர்களும் வந்த பின்னரும் வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் வரவில்லை. தாமதமாகவே வந்தார். சில ஆதரவாளர்களையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள் தமது பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லையென தர்க்கத்தில் ஈடுபட்டனர். கட்சித்தலைவர்கள் அவர்களுடன் பேசி, அனுப்பிவைத்தனர்.
காலை 10.30 மணியளவில் வேட்பாளர்களிடம் கையெழுத்து வாங்க ஆரம்பித்தபோது, சுகிர்தன் கூறினார்- சில அடையாள அட்டை இலக்கங்களும், பெயரில் எழுத்துப்பிழைகளும் உள்ளன என. அதனால் இன்னொரு தாளில் திருத்தி எழுதுவதென முடிவாகியது.
கட்சி அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள குலநாயகத்தின் அறையில் இந்த வேலை நடந்தது. குலநாயகம், சயந்தன், சிவாஜிலிங்கம், அலுவலக உதவியாளரான யுவதி ஆகியோர் அந்த வேலையில் ஈடுபட்டனர்.
இதன்போது மாவை சேனாதிராசா, அருந்தவபாலன் ஆகியோர் ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களின் கையெழுத்துக்கள் வாங்க ஆரம்பிக்கப்பட்டபோது, சிலரது பெயர் மாற்றப்பட்டதாக ஒரு கதை வேட்பாளர்களிடம் எழுகிறது. உடனயாக அவர்கள் அருந்தவபாலனை தொடர்புகொண்டனர். அருந்தவபாலன் உடனடியாக வேட்பாளர் பட்டியலை பார்க்க, மூன்று பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த மாற்றத்தை தான் சொல்லவில்லையென மாவை அந்த இடத்திலேயே சொன்னார். வேட்புமனுவை தயாரிக்கும் பணியில் இருந்த குலநாயகம், சிவாஜிலிங்கம் ஆகியோரும் தமக்கு இதில் சம்பந்தமில்லையென கூறினார்.
இதன்பின் நடந்தது ஊரறிந்தது. அதனால் நாம் அதைப்பற்றி குறிப்பிடவில்லை. நாம் குறிப்பிடபோவது, மாற்றப்பட்ட அந்த மூன்று வேட்பாளர்களும் யார்? புதிதாக நியமிக்கப்பட்ட மூவரும் யார்? இவர்களின் கடந்தகால பைல்கள் சொல்வது என்ன என்பதை.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்த மூவர் நீக்கப்பட்டு, புதிதாக சயந்தனால் சேர்க்கப்பட்டவர்கள் சுதர்சன் தனபாலசிங்கம், கு.சதாசிவமூர்த்தி, ப. ஸ்ரீதரன் ஆகியோரே.
1.சுதர்சன் தனபாலசிங்கம்
கடந்த நகரசபையில் உறுப்பினராக விகிதாசார முறைப்படி தேர்வானவர். முறைப்படி அவர் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட முடியாதவர். காரணம்- இவர் வசிப்பது கைதடியில். சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்காக நகரத்திற்கு அண்மித்த சிவன்கோவிலடியில் வசிப்பதாக பதிவொன்றை மாற்றியுள்ளதாக சில மாதங்களின் முன் கட்சிக்கு அறிவித்து,
வேட்பாளராக்குமாறு கோரியுள்ளார். எனினும், இவர் மீது நிறைய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. (அதை தனியே இன்னொரு பதிவில் குறிப்பிடுகிறோம்)
கல்வயல் வட்டாரத்தில் போட்டியிடவே இவர் விரும்பினார். உண்மையில் இவருக்கு கல்வயலுடன் எந்த தொடர்புமில்லை. கல்வயலை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபரான ரவீந்திரனை வேட்பளராக நியமித்து வேட்புமனு தயாரிக்கப்பட்டிருந்தது. ரவீந்திரன் பிரதேசத்தில் நன்மதிப்பை பெற்றவர்.
சுதர்சனை வேட்பாளராக்க வேண்டுமென சயந்தன் ஏற்கனவே கேட்டபோது, அவருக்கு பொருத்தமான வட்டாரங்கள் இல்லையென்பதால் அவரை விகிதார பட்டியலில் முதலாவதாக போட்டால், ரவீந்திரனும் வெல்வார், சுதர்சனும் வெல்வார் என தென்மராட்சிகிளை முடிவுசெய்திருந்தது. எனினும்,மார்ட்டின் வீதியில் இறுதி நேரத்தில் ரவீந்திரனின் பெயர் வெட்டப்பட்டு, சுதர்சனின் பெயர் வட்டாரமுறை வேட்பாளர்களில் இணைக்கப்பட்டுள்ளது.
2.ப.ஸ்ரீதரன்
மீசாலையை சேர்ந்தவர். மில் வைத்திருக்கிறார். கடந்த நகரசபை தேர்தலின்போது சீட் கேட்டு கட்சி அலுவலகத்திற்கு வந்ததன் பின்னர், இம்முறை சீட் கேட்பதற்கு மட்டுமே அலுவலகத்திற்கு சென்றவர். கட்சியின் கிளைக்குழு கூட்டங்களிலோ, செயற்பாடுகளிலோ பங்கு பற்றாதவர். கைலாயபிள்ளை என்ற ஓய்வுபெற்ற அதிபரே மீசாலை கிழக்கு வட்டாரத்திற்கு முதலில் பெயரிடப்பட்டவர். பின்னர் அவரை நீக்கி சயந்தனால் உட்புகுத்தப்பட்டவர்.
3.கு.சதாசிவமூர்த்தி
தமிழர்விடுதலைக்கூட்டணியில் முன்னர் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் கட்சி தாவி தமிழரசுக்கட்சிக்கு வந்தவர். கடந்த நகரசபையில் உப தவிசாளராக இருந்தவர். தேர்தல் முடிந்ததும் தன்னை தவிசாளராக நியமிக்க வேண்டுமென தில்லாலங்கடி வேலைகள் பார்த்தவர். எல்லா வேட்பாளர்களையும் தொடர்புகொண்டு, தன்னை தவிசாளராக்க வேண்டுமென ஆட்சேர்க்க- கட்சித்தலைமை தலையிட்டு “இப்படி நடப்பது நல்லதல்ல. கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கித்தராதீர்கள்“ என கடுமையாக பேசியே, ஆளை கட்டுப்படுத்தியது.
உபதவிசாளராக இருந்தபோது, எப்படி செயற்பட்டார் என்பதை தனி பதிவில் பின்னர் குறிப்பிடுகிறோம். சாம்பிளுக்கு ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறோம். நகரசபையினால் வீதி அபிவிருத்திக்கென ஒரு வீதியில் பறிக்கப்பட்ட கற்களை உழவு இயந்திரம் விட்டு தனது வீட்டிற்கு ஏற்றியெடுத்த எமகாதகன் ஆள்.
சங்கானையில் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ஒருவரை களமிறக்க பெயரிடப்பட்டபோதும், சயந்தனால் சதாசிவமூர்த்தியின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கையெழுத்து
——————————————-
சாவகச்சேரி நகரசபைக்கு தமிழரசுக்கட்சி சமர்ப்பித்த வேட்புமனுவில் இரண்டு வேட்பாளர்களின் கையெழுத்துக்கள் கள்ளக்கையெழுத்துக்கள். இதில் ஒன்று கள்ளக்கையெழுத்து என்பதை தமிழ் பக்கம் உறுதிசெய்துள்ளது. மற்றையதை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை. கிடைக்கும் தகவல்களும் பெரும்பாலும் அதை உறுதிசெய்கின்றன.
நல்லையா சுந்தரலிங்கம் என்பவரது கையெழுத்து கள்ளக்கையெழுத்து. இவர் நாளை மறுநாள் திங்கள்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் முறைப்படி புகார் தெரிவிக்கவுள்ளார்.
கோவிற்குடியிருப்பு கடற்பகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட சுபோதினி என்பவரது பெயரும் கள்ளக்கையெழுத்து எனப்படுகிறது. சத்தியக்கடதாசி முடித்த இடத்தில் நடந்த தவறையடுத்து. சிவாஜிலிங்கம் இந்த பெண்ணின் பெயரில் கள்ளக்கையெழுத்திட நடவடிக்கை எடுத்துள்ளார்.arunthavapal
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila