யாருக்கு வாக்களிப்பது குழப்பமடையும் தமிழ் மக்கள்



உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி கட்டுப்பணம் செலுத்துகின்ற நட வடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டுச்சேர்வு களும் நடந்துள்ளன.

சுயேட்சைக்குழுக்களும் களமிறங்குவதற் குத் தயாராகியிருக்கின்ற இவ்வேளையில், தமிழ் மக்கள் அதுபற்றி எந்த அக்கறையும் இல்லாதவர்களாக உள்ளனர்.
விவசாயச் செய்கையில் ஒரு நம்பிக்கை யான இலாபத்தைப் பெறமுடியவில்லை. வர்த்த கத்துறையில் ஏற்படுகின்ற தோல்விகள், கட னடிப்படையிலான வாகன கொள்வனவுகளின் துன்பங்கள். விடுவிக்கப்பட்ட காணியில் வீடு கட்ட முடியவில்லையே என்ற ஏக்கங்கள், பிள் ளைகளின் படிப்புச் செலவு,  நாளாந்த சீவியம் இப்படியாக ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மக் கள் முகம் கொடுத்திருக்கும்போது,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இராமன் கேட்டால் என்ன? இராவணன் கேட்டால் என்ன? ஏன் கூட வந்த அனுமன் கேட்டால்தான் என்ன? என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய மனக்கிலேசம் சாதாரணமானதல்ல. நம்பவைத்து ஏமாற்றி விட்டவர்கள் தமிழ் அரசியல்வாதிகள் என்ற நிலைமையே உள்ளது.

தமிழ் மக்கள் பேரவை களமிறங்கினால் எங்கள் வாக்குகள் அவர்களுக்கே என்பது மக்களின் திடமான நிலைப்படாக இருந்தது.
இருந்தும் தமிழ் மக்கள் பேரவை, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என மக்களிடம் கூறியதை நிலைநிறுத்த வேண்டும் எனக் கருது கிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானங் கள் எடுப்பது தவிர்க்க முடியாததாயினும் தமிழ் மக்கள் பேரவை தான் எடுத்த முடிவில் உறுதி யாக இருப்பதே தனது கொள்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் ஏற்புடையது எனக் கருதுகிறது.
இதனால் மக்களின் எதிர்பார்ப்பு திசை மாறிப் போக, இப்போது யாருக்கு வாக்களிப் பது என்ற விடயம் முன்னிற்கின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெறுமனே சபைக்கானது என்றால் பரவாயில்லை என்று விட்டு விடலாம்.
ஆனால், இம்முறை நடைபெறப் போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் சபைக் கான அரசை உருவாக்குவது மட்டுமன்றி சில அரசியல் கட்சிகளின் போக்குகளுக்கு ஆதர வாக அல்லது எதிராக அமைவதாக இருக்கும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்று தமிழ் மக்கள் வலியுறுத் துகின்ற நேரத்தில், அரசின் தீர்வுத் திட்டமா னது வடக்கு கிழக்கை இணைப்பதாக இல்லை.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அதனை இணையுங்கள் என்று வலியுறுத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு இணைப்பு என்பது உடனடிச் சாத்தியமில்லை என்கிறது. 
ஏலவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தது என்பதையும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாகம் நடைமுறையில் இருந்ததையும் மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் வடக்கு கிழக்கு இணைவு சாத்தியமில்லை  என்கின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தை தமிழ் மக்கள் கடுமையாகச் சந்திக்கவே செய்வர்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila