யாழ். மாநகர மேயர் வேட்பாளர் மணிவண்ணனிடம் பொலிசார் விசாரணை!


தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் வேட்பாளர்  வி. மணிவண்ணனிடம்  பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் வேட்பாளர் வி. மணிவண்ணனிடம் பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரத்ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசமைப்புச் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே தம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணை வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கினர்.
சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அன்றைய நிகழ்வில் பங்குபற்றிய சிலர் மற்றும் ஊடகவியலாளர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நல்லூர் இளங்கலைஞர் மண்டபம் உரிய வகையில் அனுமதி பெறப்பட்டா தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது என்பதுக்குரிய விசாரணையை மண்டப நிர்வாகத்திடம் நடத்தவேண்டும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவுக்கு எழுத்துமூல கட்டடையை வழங்கினார்.
வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவினர் நேற்று முற்பகல் விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை இடம்பெற்றது. விசாரணைகள் தொடரவுள்ளதால் அதுபற்றிய தகவல்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila