ஒற்றுமைப்படுவதற்கான சூழ்நிலையும் கலைந்து போகிறதோ!



தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய காலசூழ்நிலை தற்போது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளும் ஒற்றுமைப்படுவதற்கான களநிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு தமிழ் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையை வலி யுறுத்தியுள்ளன.
பொதுஅமைப்புக்களும் தமிழர் நலன் சார்ந்தவர்களும் ஒற்றுமைப்படுங்கள் என்ற கோரிக்கையை விடுத்தனர்.

எனினும் அந்தக் கோரிக்கைகள் கவனிப் பாரற்று கிடக்கிறதுபோல் தெரிகிறது.
தவிர, தேர்தல் முடிந்து நாட்கள் செல்லச் செல்ல தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப் படும் தன்மை குறைவடைந்து செல்வதையும் ஒற்றுமைப்படுங்கள் என்ற கோரிக்கைகள் வலுவிழந்து வருவதையும் காணமுடிகின்றது. இத்தகையதொரு நிலைமை ஆரோக்கியமானதல்ல.

இந்த நிலைமை கவனிக்கப்படாத சந்தர்ப்பத் தில் - தென்னிலங்கையில் ஏற்படப்போகும் அரசியல் மாற்றங்கள் தமிழினத்துக்குப் பேரா பத்தாக அமையும்.
ஆக, இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, சர்வதேச  போர்க்குற்ற விசாரணையை மீளவலியுறுத்த வேண்டும்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று தான் தென்பகுதியில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்களை சரிப்படுத்துவதற்கும் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்குமான ஒரே வழி.

அதேவேளை தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம் என்ற வாக்குறுதிகளை அண்டை நாடான இந்தியாவும் மற்றும் அமெரிக்கா, பிரிட் டன் போன்ற நாடுகளும் நமக்குத் தந்துள்ளன.

நல்லாட்சி மூலமாக தமிழ் மக்களின் பிரச் சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்ற உறுதி மொழியை நல்லாட்சி அரசு சர்வதேசத்துக்கு வழங்கியிருப்பதன் காரணமாகவே, 
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை சர்வதேச சமூகம் கொண்டுள்ளன.

ஆனால் இப்போது காற்றழுத்தமிக்க கடற் பரப்பில் தத்தளிக்கும் படகுபோல நல்லாட்சி அரசின் நிலைமையுள்ளது.
எனவே நல்லாட்சியையோ அல்லது ஆட்சி யைக் கைப்பற்றுவோம் என்று சூளுரைக்கும் தரப்பினரையோ நம்பினால் தமிழ் மக்களின் எதிர்காலம் அவலம் நிறைந்ததாகவே இருக் கும்.
ஆகையால் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து; சர்வதேச போர்க் குற்ற விசாரணையை உடனடியாக நடத்துங் கள் என்ற கோரிக்கையை உலக அரங்கில் எழுப்புவதுதான் ஒரே வழியாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila