முள்ளிவாய்க்காலில் வெள்ளையடிப்போம்?

mulli2
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை இல்லையெனவும் விடுதலைப்புலிகளே முஸ்லீம்கள் மீது இனஅழிப்பை நடத்தியதாக தற்போது வரை வாதிட்டுவரும் தமிழரசுக்கட்சி தலைமையின் விசுவாசிகள் இன்று முள்ளிவாய்க்கால் புனித பூமியில் நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர்.2009 எங்களின் இன படுகொலையை கண்டும் காணமல் இருந்த உலக நாடுகளே இன்று சிரியாவில் நடக்கும் மனித படுகொலையை தடுத்து நிறுத்து என எம்.சு.சுமந்திரனின் முக்கிய இடது கையும் மாகாணசபை உறுப்பினருமான சோ.சுகிர்தனின் கோசத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறியுள்ளது.
சிரிய மக்களிற்காக குரல் கொடுப்பதற்கு முன்னதாக எமது மண்ணில் நடந்தது இனஅழிப்பது தான் என்பதை தமது கட்சி தலைமையினை ஏற்க வைக்கவேண்டியது அவர்களது முதல் கடமையாகும்.
முள்ளிவாய்க்காலில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருகை தந்து கூட்டமைப்பிற்கு வெள்ளையடித்துக்கொள்வது அதன் இரண்டாம் கட்ட தலைமைகளது வழமையாகும்.ஆனாலும் கடந்த ஆண்டில் இரா.சம்பந்தனையும்,சுமந்திரனையும் அழைத்து வந்து வெள்ளையடிக்க சத்தியலிங்கம் -சிவஞானம் கூட்டு அரங்கேற்றிய நாடகம் பிசுபிசுத்துப்போயிருந்தது தெரிந்ததே.
mulli3
இப்போது சிரியாவினை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டு இத்தரப்புக்கள் களமிறங்கியுள்ளன.அதிலும் தமிழரசினில் ஜக்கியமாகியுள்ள வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் உள்ளடங்கியுள்ளார்.
இறுதி இனஅழிப்பின் போது பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பிரதேசங்களின் மீதும் அங்கு செயற்பட்ட மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்திய போர்க்குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மீது எந்த விசாரணையும் இல்லை. மாறாக தூதரக பணிக்கு அனுப்பப்பட்டார். அங்கு வந்து தமிழர்களை கொலை செய்வேன் என்று மீளவும் மிரட்டுகிறார்.
அவரை பாதுகாப்பதில் நல்லாட்சி அரசும் அதனை பாதுகாக்கும் கூட்டமைப்பும் திரைமறைவு பங்காளிகளாக இருக்கின்றன.
அனைத்துலக நெருக்கடி வந்தபோதும் அவருக்கு பதவி கொடுத்து பாதுக்காத்திருக்கிறது மைத்திரி-ரணில் இன அழிப்பு அரசு.
mulli4
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இனஅழிப்பினை குறைந்தளவிலேனும் ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்தை வெளிப்படுத்த 4ட்டமைப்பு தலைமையின் விசுவாசத்திற்குரிய இத்தரப்புக்கள் தயாராகவில்லை.
தாயகம், தேசியம், சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்த புரிதல் ஏதுமற்ற இக்கும்பல் பரபரப்பு ஊடக விளம்பரத்திற்காக முள்ளிவாய்க்கால் சென்றுள்ள.
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் மூலம் புதிய அரசியல் பாதைக்கு வந்த விளம்பர பிரியர்கள் கட்சி வேறு ஆதரவு வேறு எனும் புதிய வியாக்கியானத்தை இனி தொடர்வார்கள் என்பதில் வேறு கருத்தில்லை.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila