கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த சர்மா எனப்படும், ஸ்ரீஸ்கந்தராஜா குருக்களை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முற்றாக விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
|
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்டிருந்த குருக்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் அவர் சுயமாக வழங்கிய வாக்குமூலம் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.
மேலும் இந்த வாக்குமூலத்தை தவிர குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்மா ஐயரை நிரபராதி என்று கருதி வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பத் அபேகோன், சர்மா ஐயரை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கா சர்மா ஐயர் கடந்த 3 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கோத்தா கொலை முயற்சிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட குருக்கள் விடுதலை!
Add Comments