நாடு பிளவுபடுவதை தடுக்க முடியாது! - கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண



புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நாட்­டைப் பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­தான கருத்­துக்­கள் பொய்­யா­னவை. புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்வு கிடைக்­கா­மல் போனால் நாடு பிள­வு­ப­டு­வதை தடுக்க முடி­யாது என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின்  நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண தெரி­வித்­தார்.
புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நாட்­டைப் பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­தான கருத்­துக்­கள் பொய்­யா­னவை. புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்வு கிடைக்­கா­மல் போனால் நாடு பிள­வு­ப­டு­வதை தடுக்க முடி­யாது என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண தெரி­வித்­தார்.
“ அர­ச­மைப்பை விரை­வா­கத் தயா­ரிக்க வேண்­டும் என்­பதே எமது நோக்­கம். அதற்­கா­கவே நாம் எமது முழு நேரத்­தை­யும் இந்த நட­வ­டிக்­கை­க­ளு­டன் செல­வ­ழிக்­கின்­றோம். நாம் அத­னைக் கையா­ளும்­போது அதில் பக்­கச் சார்பு உள்­ள­தா­கக் கூறு­கின்­றார்­கள். புதிய அர­ச­மைப்­பைத் தடுப்­பது யார் என்­பது இவர்­க­ளின் கருத்­தின் மூல­மா­கவே வெளிப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா சுதந்­திர கட்­சி­யில் தனி அணி­யாக உள்­ள­வர்­கள் மற்­றும் மகிந்த அணி உறுப்­பி­னர்­களே அர­ச­மைப்­பைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளுக்கு இந்த நாட்­டில் தீர்வு கிடைக்க வேண்­டும் என்ற தேவை இல்லை.
நாம் வழி­ந­டத்­தல் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கும் நிபு­ணர் குழு­வு­டன் முரண்­பட்­ட­தாக ஆரம்­பத்­தில் கூறி­னார்­கள். ஆனால் எமக்­கும் நிபு­ணர் குழு­வுக்­கும் இடை­யில் எந்த முரண்­பா­டு­க­ளும் இருக்­க­வில்லை. எமது தனிப்­பட்ட தலை­யீ­டு­கள் எது­வும் அதில் இருந்­த­தில்லை. வழி­ந­டத்­தல் குழு­வில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது தெரி­யாது இவர்­கள் ஊட­கங்­கள் முன்­பாக பொய்­யான கார­ணி­க­ளைக் கூறி­வ­ரு­கின்­ற­னர்.
நிபு­ணர்­குழு சுயா­தீ­ன­மா­கக் கூடி முடி­வெ­டுக்­கும். இதனை நான் வழி­ந­டத்­தல் குழு­வில் தெரி­வித்­தேன். அர­ச­மைப்­புச் சபை­யின் பிரத்­தி­யே­கச் செய­லர்­ கூட நிபு­ணர் குழு­வின் கூட்­டங்­க­ளில் கலந்­து ­கொள்­ளக்­கூ­டாது என்­ப­தை­யும் தெரி­வித்­துள்­ளேன்.
நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும் கூட்­டாட்சி அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தா­கக் குற்­றஞ்­சு­மத்­து­கின்­ற­னர். இந்த நாட்­டினை துண்­டா­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே நாம் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றோம். புதிய அர­ச­மைப்­பில் தீர்­வு­கள் இல்­லாது போகும் பட்­சத்­தில் நாடு பிள­வு­ப­டு­வ­தைத் தடுக்க முடி­யாது.
உரு­வாக்­கப்­ப­டும் புதிய அர­ச­மைப்­பில் பிள­வு­ப­டாத நாடு, சகல மக்­க­ளுக்­கான உரி­மை­கள் என்­பன உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அதே­போல் மிக முக்­கி­ய­மாக, இது­வரை அர­ச­மைப்­புக்­க­ளில் இல்­லாத புதிய விட­யத்தை உள்­ள­டக்­கி­யுள்­ளோம். கொழும்பு அரசு நினைக்­கும் நேரத்­தில் மாகாண சபை­யைக் கலைக்க முடி­யும். இவ்­வா­றான ஆரோக்­கி­ய­மான, தேசிய பாது­காப்பு பாதிக்­கப்­ப­டாத சரத்­துக்­களை நாம் உரு­வாக்­கி­யுள்­ளோம்.
அதே­போல் சிறு­பான்மை மக்­க­ளின் நலன் சார்ந்த, அவர்­கள் ஏற்­றுக்­கொள்­ளும் நகர்­வு­க­ளைக் கொண்ட அர­ச­மைப்­பாக அதனை உரு­வாக்கி வரு­கின்­றோம். இதனை சகல தரப்­பி­ன­ரும் ஏற்­று­கொள்­ள ­வேண்­டும். நாடா­ளு­மன்­றத்­தில் சகல தரப்­பி­ன­தும் ஆத­ரவு இதற்கு அவ­சி­ய­மா­கின்­றது. எம்­மைக் குறை­கூ­றும் டிலான், சுசில், தினேஷ் போன்­ற­வர்­கள் அர­ச­மைப்பை ஆத­ரிப்­பார்­களா என்­பதை தெரி­விக்­க­வேண்­டும் – என்­றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila