வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்துக்கான முழுச் செலவான 100,000 பவுண்டுகளை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது
|
இதன் மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பாராளுமன்றின் நிலையியற் குழு இதனை கண்டறிந்துள்ளது. இதனை அடுத்து ஐன் பைஸ்லிக்கு 2018 ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐன் பைஸ்லிக்கு வழங்கப்பட்டுள்ள 30 அமர்வுகளுக்கான தடை, கடந்த 15 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.
|
இலங்கைப் பயணத்தினால் இடைநிறுத்தப்பட்டார் பிரித்தானிய எம்.பி!
Add Comments