இப்போதெல்லாம் ஈடுபாட்டுடன் பணி செய் தல் என்பது இல்லாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
குறிப்பாக புலம்பெயர்ந்த நம் உறவுகள் தாய கத்துக்கு வந்து செல்கையில் இவ்வாறான அவதானிப்பைக் கூறிவைக்கின்றனர்.
அவர்களின் அவதானிப்பை நாம் உதா சீனம் செய்வோமாயின் அதன் பாதிப்பு அவர் களுக்கல்ல. அது நமக்கே இழுக்கு என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
தவிர, புலம்பெயர்ந்த நம் உறவுகள் தாயகத் துக்கு வருகின்றபோது எங்கள் தொடர்பில் அவர்கள் முன்வைக்கின்ற மதீப்பீடுகள் மிக வும் முக்கியமானவை.
ஏனெனில் அவர்கள் எங்கள் உறவுகள், எங்களோடு வாழ்ந்தவர்கள். எங்களைப் பற்றி மிக நிதானமாக அறிந்தவர்கள். அதேநேரம் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்நாடுகளில் வசிப்பவர்கள்.
எனவே அவர்கள் வாழுகின்ற நாட்டு மக் களின் பண்பாடுகள், அவர்களின் முயற்சி யாண்மைகள் பற்றியும் தெளிவாக அறிந்த வர்கள்.
எனவே எங்கள் தொடர்பான புலம்பெயர் உறவுகளின் மதிப்பீடு என்பது நமக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடியது.
அந்தவகையில் பார்க்கும்போது, எங்களின் சமகாலப் போக்கு மிகவும் பின்தங்கியதாக இருப்பதையும் எதையும் ஈடுபாட்டுடன் நாம் செய்யவில்லை என்றும் முயற்சி, கவனம் செலுத்துதல், ஆர்வம் என்பன நலிவுற்றிருப்ப தாகவும் அவர்களின் கருத்துக்கள் அமைந் துள்ளன.
ஆக, இதுவிடயத்தில் நாம் கவனம் செலுத்தி எங்களை மீள் எழுச்சிக்கு உட்படுத்த வேண்டும்.
இல்லையேல் உலகில் இடமாற்றங்களுக்கு ஏற்ப எங்களை மாற்றமுடியாதவர்களாகத் திண்டாட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இங்கு முன்வைக்கப்படும் ஈடுபாடு என்பது தனி மனிதர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்ல. மாறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட - குழுரீதியான விடயங்களிலும் ஈடுபாட்டுடன் கூடிய பணிகள் மிகவும் மோசமாக இருப்ப தாகவும் இதன்காரணமாக மாணவர்களி டையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் கூட்டுப் பங்களிப்பும் இழந்து போகிறது என்பதாகவும் புலம்பெயர் உறவுகளின் கணிப்பீடுகளில் இருந்து தெரியவருகிறது.
அதாவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தில் இடம்பெறுகின்ற கருத்தமர்வுகள், மாநாடு களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை என்பதும் நினைவுப்பேருரைகளில் பங்குபற்று பவர்களின் அளவு என்பதும் ஏதோ கடன் கழிப்பு நிகழ்வாகவே அமைகிறது எனக் கூறப் படுகிறது.
தவிர, சமய அமைப்புகள் நடத்துகின்ற மாநாடுகள், கூட்டங்கள் என்பன அநாதைச் சிறுவர் இல்லம் சார்ந்த பிள்ளைகளைக் கொண்டு இடம் நிரப்பப்படுவதான நிகழ்வாகிவிட்டன.
ஒட்டுமொத்தத்தில் இவற்றையயல்லாம் நோக்கும்போது ஈடுபாட்டுடன் பணி செய்யாத தன்மை தெளிவாகிறது.
ஈடுபாட்டுடன் பணி செய்யாததன் காரண மாகத்தான் பங்குபற்றுபவர்களுக்கான பஞ்சம் நீடிக்கிறது என்ற தகவல்கள் உள்ளன என்ப தால் இவை தொடர்பில் அனைவரும் கோப தாபம் இன்றிக் கவனம் செலுத்த வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை