மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக மாகாண சபைகளின் ஆட்சியதிகாரங்கள் அர்த்தமுள்ளதாக்கப்பட வேண்டும். அதனை செய்யத் தவறினால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார்.
சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கு வதற்கும், வினைத்திறனாக இயங்குவதற்கும் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.
அரசியலமைப்பின் 13-வது திருத்தச்சட்டத்தின் ஊடாகவே மாகாண சபை கள் உருவாக்கப்பட்டன.
இருந்தும் மாகாண ங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பிரேமதாஸவின் காலத்தில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க குழு புதிய அரசியலமைப் புக்கான தேவையை வலியுறுத்தியிருந்தது.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிக ளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அதிகாரப்பகிர்வை வழங்க பேச்சு நடத்தினர்.தற்போது இரண்டு பிரதான கட்சிக ளும் இணைந்து கூட்டு அரசை அமைத்துள்ளன.
இந்த அரசின் ஆட்சியில் புதிய அரசியல மைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதிகாரப்பகிர்வு தொடர்பான யோச னைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும் அதை நடை முறை ப்படுத்த ஆர்வம் காட்ட வில்லை.
அதேவேளை, நாடு சுதந்திரமாக முன்னேறிச் செல்வ தற்கும் புதிய அரசிய லமைப்பு அவசியமாகும். புதிய அரசியல மைப்பு இல்லாவிட் டால் நாட்டுக்கு எதிர் காலம் இல்லை.
எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது அவசியமானது. இரு ந்தபோதும் இந்தத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமை ப்பு நிறைவேற்றப் பட்டு மாகாண சபை களின் ஆட்சியதிகார ங்கள் அர்த்தமுள்ள தாக்கப்படவேண்டும்.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, நிறைவேற்று அதி காரத்தை ஒழிப்பது மற்றும் தேர்தல் முறை மறுசீரமைப்பு போன்ற விடயங்க ளுக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய அர சியலமைப்பு உருவா க்கப்படவேண்டும் என்றார்.