தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது. இப் பரீட்சைக்கு தோற்றுகின்ற அத்தனை மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பது தனித்து மாணவர்களுக்கு மட்டுமல்ல. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் என்ற தரப்பினருக்கும் இந்தப் பரீட்சை சவாலாக அமைந்து விடுகின்றது.
என் பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதை ஒரு பெரும் தோல்வியாக நினைக்கின்ற மனநிலைக்குப் பெற்றோர்கள் ஆளாகிவிட்டனர்.
இவ்வாறு ஏதோ பெரும் தோல்வியைச் சந் தித்து விட்டதாகப் பெற்றோர்கள் நினைப்பது சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தல் கட்டாயமானதாகும்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி யடையாவிட்டாலும் என் பிள்ளை கல்வியில் சாதனை படைப்பான் என்ற நம்பிக்கை எந்தப் பெற்றோரிடம் இருக்கிறதோ அந்தப் பெற்றோர் கள் நிச்சயம் தம் பிள்ளைகளை ஆளுமைமிக்கவர்களாக கல்வியில் சிறந்தவர்களாக ஆக்கிக் கொள்வர் என்பதே உண்மை.
ஆக, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என் பது ஏழை மாணவர்கள் நிதி உதவி பெறுவதற் கும் பாடசாலை அனுமதிக்கானதுமேயன்றி இதுவே எல்லாவற்றையும் தீர்மானிப்பது என்ற நினைப்பு மகா தவறாகும்.
இருந்தும் இந்த நினைப்புகளில் இருந்து பெற்றோர்கள் மீளமுடியாதவர்களாக உள்ள னர். இதற்கு வேறு பல காரணங்களும் வகி பங்கு செலுத்துகின்றன என்ற உண்மையை யும் நாம் அடியோடு நிராகரித்துவிட முடியாது.
ஆம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை யில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக் கையே ஒரு பாடசாலையின் மாணவர் அனு மதியை தீர்மானிக்கின்ற காரணியாக அமை ந்து விடுவதால், ஆரம்ப கல்வி இருக்கக்கூடிய அத்தனை பாடசாலைகளுக்கும் தரம் ஐந்து புலமைப்பரி சில் பரீட்சை என்பது சவாலாகவே அமைகின் றது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடை கின்ற பாடசாலைகளை நோக்கி தங்கள் பிள் ளைகளை இழுத்துச் செல்கின்ற ஒரு கலாசார சூழ்நிலை உருவாகிய நிலையில் குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதி மிகையாக இருக்க, பல பாடசாலைகள் பிள்ளைகளின் வருகைக் காக தவம் கிடக்கின்றன.
எனினும் இந்தப் போக்கில் யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது.
இத்தகையதோர் சூழ்நிலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் பெறுபேற்றுக்குப் பின்பான தாக்கங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இங்குதான் புலமைப்பரிசில் பரீட்சை என் பது நெருப்பாற்றைக் கடக்கின்ற நீச்சலாக மாறுகின்றது.
இந்த நிலைமை மாற்றமடையாதவரை எங்கள் பிஞ்சுகளின் மனங்கள் ஏதோவொரு வகையில் வதைபட்டு வக்கிரமாக்கப்படப் போகின் றன என்பதுதான் துரதிர்ஷ்டமான உண்மை.