மன்னாரிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட நீதவான் புதைகுழி தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தைப் பற்றி ஊடகவியலாளர்களிடையே பேசுவதில்; நிபுணர்களிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.
மன்னார் புதைகுழியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 140 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்டுள்ள மனித வன்கூடுகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளது.
மே மாதத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து, நீதித்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சமிந்த ராஜபக்சவும், தடயவியல் தொல்பொருள் பேராசிரியரும் பேராசிரியர் ராஜ் சோமதேவா பத்திரிகையாளர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார் நீதவான் டி.சரவணராஜ் தற்போது நீதிமன்ற பதிவாளரை உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமித்துள்ளார்.
நீதிபதி தினசரி பதிவாளருக்கு வழங்கப்படும் அறிக்கையைப்பெறுவார். பத்திரிகையாளர்கள் பதிவாளரிடம் இருந்து தகவலைப் பெற வேண்டும்,
2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீச்சாரத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழி குறைந்தபட்சம் 82 உடல்கள் கொண்டதாக இருந்திருந்தது. அது அடையாளம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சதொச புதைகுழியினை மூடிவிட ஏதுவாக முன்னதாக நீதிவானை முறையற்றவகையில் இடமாற்றம் செய்திருந்த அரசு ஊடகங்களது கண்காணிப்பினை தவிர்க்க மும்முரமாகியுள்ளது.