வவுனியா வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை - வன இலாகா.!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மக் கள் மீள்குடியேறிய வன இலாகாவினரினால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானத்தினையும் கவனத்தில் கொள்ளாது வன இலாகாவினர் அலட் சியம் செய்துள்ளனர். 

நேற்றைய தினம் அப்பகுதிக்குச் சென்ற வன இலாகாவினர் மக்களது மீள் குடியேற்ற நடவடிக்கைக்கு தடையை  விதித்துள்ளனா். 

இது குறித்து மேலும், வவுனியா வடக் கில் தமிழ் பழம்பெரும் கிராமமான காஞ்சிரமோட்டை கிராமம் அதிகள வான மக்கள் வாழ்ந்த பிரதேசமாக காணப்பட்ட இந் நிலையில் யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தியாவிற்கும் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்ததுடன் யுத்தம் நிறைவுக்கு வந்ததை அடுத்து 

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களும் தாம் பூர்வீகமாக வாழ்ந்த காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேறுவதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரியதற்கு இணங்க வவு னியா வடக்கு பிரதேச செயலாளரும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு தமது தரப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததுடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையி னால் வீடுகளை வழங்குவதற்கும் அடிக்கல்லும் நாட்டப்பட்டிருந்தது. 

சுமார் 45 நாட்களை கடந்தும் மக்கள் தமது காணிகளில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வன வளத்திணைக்களத்தினர் குறித்த காணி வன வளத்திணைக்களத்திற்கு உரியது என தெரிவித்ததுடன், மேற்கொண்டு காணிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என வும் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 18 குடும்பங்களுடன் உள்ளூரில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுமாக 35 குடும்பங்கள் இக்கிராமத்தில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர். 

இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன இலாகாவினருக்கும் இணைத் தலைவர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுடன் மனச்சாட்சியுடன் வன இலாகாவினரை நடக்குமாறும், மக்களின் பிரச்சினை களை உணர்ந்து செயற்படுமாறும் கோரப்பட்டிருந்தது. 

இதன்போது வவுனியா வடக்கு பிரதேச செயலாளருடன் வனஇலாகா அதிகாரி முரண்பட்டுக்கொண்ட நிலையில் வனவளத்திணைக்களத்தின் தலைமை அதி காரிக்கு அனுமதிக்காக கடிதம் அனுப்புமாறும் தெரிவித்துள்ளாா். 

குறித்த நிலையில் வட மாகாண முதலமைச்சரும் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் வன இலாகா அதிகாரிகளிடம் குறித்த கிராமத்தில் மக் கள் மீளக் குடியேறியுள்ளமையினால் அவர்கள் தாம் வாழ்வதற்கான அபிவி ருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் தெரிவித்ததுடன் இதனை அபிவிருத்திக் குழுவில் தீர்மானமாகவும் எடுத்துள்ளனா். 

இதற்கு அபிவிருத்திகுழு கூட்டத்தில் சம்மதம் தெரிவித்த வன இலாகாவினர் நேற்று பிரதேச செயலாளருடன் காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு சென்று எவ் வித காணி துப்பரவுப்பணிகளோ வீடுகளை அமைக்கும் பணிகளையோ செய் யக்கூடாதெனத் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்கும்படி பணித்துள்ளனா். 

இதன் காரணமாக வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த மீளக் குடியேறிய மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் மழை காலம் வருவதற்கு முன்னர் தாம் வீடுகளை அமைத்து பாதுகாப்பாக வாழலாமென எண்ணி இருக்கும்போது இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ள தாகவும் தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனா். 

இந் நிலையில் அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கூட்டமும் பயனற்றதா என்ற கேள்வியை மீள்குடியேறிய மக்கள் தொடுத்துள்ளனா். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila