முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று கடைசி நிலையில்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் இருப்பதால்தான் தனக்கு இந்த பதவியை தந்துள்ளதாக பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட விவசாயக்குழு கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் விவசாய உற்பத்தியில் முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று கடைசி நிலையில் உள்ளது. வடக்கின் விவசாய உற்பத்திகள் அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளன.
ஆனால் வடக்கில் 40 வீதமானவர்கள் விவசாயிகளாக காணப்படுகின்றனர். வடக்கு, கிழக்கின் விவசாய துறையினை மேம்படுத்த அரசிடம் விசேட மீள் எழுச்சி நிதியினை கோரியிருக்கிறேன்.
Add caption

அரசும் அதனை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளது. எனவே இந்த பதவியின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதில் மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆயகுலன், கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila