பெற்ற கடன்களுக்காக பாலியல் ரீதியாக சுரண்டப்படும் பெண்கள்! - ஐ.நா நிபுணர் திடுக்கிடும் தகவல்


இலங்கையில் பெண்கள் கடனை மீள திருப்பிச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்றனர் என இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த,  ஐநாவின் வெளிநாட்டு  கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெண்கள் கடனை மீள திருப்பிச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்றனர் என இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, ஐநாவின் வெளிநாட்டு கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடன்களை மீளப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்களால் பெண்கள் உள, உடல் ரீதியான வன்முறைகளை சந்திக்க நேர்கின்றது. கடன்பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்பதற்கு முயன்ற சம்பவங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன். சிலர் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர், வேறு சிலர் ஒப்பந்தத்தை மீறியதற்காக வன்முறைகளை சந்தித்துள்ளனர் அல்லது பெற்ற கடனை மீள திருப்பி செலுத்துவதற்காக பல மணிநேரம் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணமாகவுள்ளது.
அதேவேளை, நுண்கடன்கள் அதனைப் பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுமுள்ளன. எனினும் இலங்கையில் நுண்கடன்களை வழங்கியவர்களின் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகத்தின் தீவிர தன்மையை கருத்தில் கொள்ளும் போது அரசாங்கம் இதில் தலையிட வேண்டியது அவசியம்.
இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலவும் பகுதிகளை நுண்கடன் நிறுவனங்கள் இலக்கு வைப்பதை நான் அறிந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila