வாயே திறக்காத இரா.சம்பந்தன்?

டெல்லி சென்றுள்ள இலங்கையின் எதிர்கட்சி தலைவரும்,கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் வாயே திறக்காதிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் பயணம் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டுள்ளதாக ஈபிடிபி கட்சி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனுடன் டெல்லியில் தங்கியுள்ள நிலையில் டக்ளஸ் இந்த கருத்தினை பதிந்துள்ளார்.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த கூட்டமைப்பினர் தற்போது, தமதுசுய நலன்களுக்காக தென் இலங்கையில் அரசுடன் இணக்க அரசியல் வழிமுறையையும், வடக்கு கிழக்கு இலங்கையில் அரச எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான இரட்டைத் தோணிப் பயணமானது அவர்களையும் கடலுக்குள் தள்ளிவிட்டிருப்பதுடன், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையையும் வலுவிழக்கச் செய்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் கூர்முனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இணக்க அரசியல் நாடகம் முறித்துப்போட்டுவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~கள் தொடர்பாக தென் இலங்கையில் கூட்டமைப்பு கொடுக்கும் வரைவிலக்கணமானது, தமிழ் மக்கள் இரத்தமும், சதையுமாக நடத்திய போராட்டத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது.

ஆனால் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தை எதிர்ப்பது போலவும், அரசுக்கு சவால் விடுவது போலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாசாங்கு செய்கின்றனர். தெற்கில் இணக்க அரசியலுக்கு ஒரு அணியும், வடக்கு கிழக்கில் அரச எதிர்பு அரசியலை முன்னெடுக்க இன்னொரு அணியாகவும் இரு அணிகளாக கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.


இவ்வாறான நடவடிக்கைகளை தமக்கு வாய்ப்பான போது கூட்டமைப்பின் வேலைத்திட்டமாக பரப்புரை செய்வதும், பாதகமாக அமையும்போது அது கூட்டமைப்பிலுள்ளோரின் தனிப்பட்ட நடவடிக்கை என்றும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டுமென டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila