இறுதி யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகளால் மக்களைக் கொன்ற நாட்டிற்கு சர்வதேசத்தில் அங்கீகாரம்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சட்டவிரோத கிளஸ்டர் குண்டுகளை பயன் படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து இதுவரையிலும் விடுபடாத ஸ்ரீலங்காவிற்கு, கிளஸ்டர் குண்டுகள் தொடர்பிலான சர்வதேச மாநாட்டிற்கான தலைமைத்துவம் வழங்கப்பட்டமைக்காக எதிர்த்துள்ளது. 

சர்வதேச மனித உரிமை அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம், யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஸ்ரீலங்கா இராணுவம் கிளஸ்டர் குண்டுகளை வீசியதாக இதுவரையிலும் பகிரங்கப்படுத்தப் படாத ஐக்கிய நாடுகளின் உள் தகவல் கள் சில குறிப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவினால் கிளஸ்டர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்துள்ளது.

கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தவில்லை என அரசாங்கம் கூறுமாயின், வன்னி யுத்த களத்தில் இன்றும் கிளஸ்டர் ஆயுதங்களின் எச்சங்கள் தென்படு வது எவ்வாறு எனவும் மனித உரிமை அமைப்பு கேள்வி எழுப்பியுள் ளது.

இது தொடர்பில் சுயாதீனமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையொ ன்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் 2016 ஆம் ஆண்டு கோரியதையும் குறித்த அமைப்பு நினைவுட்டியுள்ளது.

கிளஸ்டர் ஆயுதம் தொடர்பான அரச தரப்பினரின் 9 ஆவது மாநாட்டின் தலை வர் பதவிக்கு ஸ்ரீலங்கா கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி நியமிக்கப் பட்டுள்ளது.

இப் பொறுப்பினை ஸ்ரீலங்கா ஏற்றுகொண்டதோடு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அயீஸ் சிறந்த அர்ப்பணிப்பு, தூரநோக்கு, கூட்டு முயற்சி மற்றும் பதில் செயற்பாடுகள் மூலமே “கிளஸ்டர் குண்டுகளின்றிய உலகம் என்ற இலக்கை செயன்முறை ரீதியில் எட்ட முடியும் எனக் கூறியிருந்தார்.

யுத்த காலத்தில் கிளஸ்டர் குண்டுகள் பாவனை மற்றும் அதன் பின்னர் யுத்த களத்தினை சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்ற காலவேளையில் வெளிப் படைத் தன்மையின்றி செயற்பட்ட ஸ்ரீலங்கா தலைமைத்துவப் பதவியை வகி க்க தகுதியற்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான செயற் றிட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது.

“கிளஸ்டர் குண்டு மாநாட்டின் தலைமைத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறி லங்கா, கடந்த காலத்தைப் பற்றி நேர்மையாக காணப்பட வேண்டும்.” உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான செயற்றிட்டம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தியதை உறுதிப்படுத்த ஐக் கிய நாடுகள் அமைப்பின் தரவுகள் மற்றும் வன்னி பிரதேசத்தை சேர்ந்த சில ரின் அறிக்கைகளினையும் குறித்த அமைப்பு பகிரங்கப்படுத்தியுள்ளது.

 கடுமையான யுத்தம் இடம்பெற்ற 2009 மார்ச் மாதத்தின் 5 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிளஸ்டர் குண்டுகளின் தாக்குதலில் 225 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குறுந்தகவல்களில் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களினால் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட குறுந்தகவல்கள் இந்த தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக மார்ச் 5 ஆம் திகதியே அதிக அழிவு ஏற்பட்டதாகவும் அந்த நாளில் மாத்திரம் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி, 134 பேர் உயிரிழந்ததுடன் 270 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனா்.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் யுத்தம் தீவிரமடை ந்த போது களத்தில் இருந்த வேளையில் கிளஸ்டர் குண்டு தாக்குதல்களால் காயமடைந்ததாக கூறப்படும் 24 பேர் தமக்கு தகவல் வழங்கியதாக உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான செயற்றிட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது.

'பாரிய கிளஸ்டர் குண்டுகள் வானத்தின் மேல் வெடித்து, சிறு குண்டுகள் மழை போல சத்தத்துடன், நிலத்தில் வீழ்ந்ததாக விஸ்வமடு பிரதேசத்தில் கிளஸ்டர் குண்டுகள் வீழ்ந்தமையைக் கண்டதாக தெரிவிக்கும் ஒருவர் கூறியுள்ளதா கவும் உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான செயற்றிட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் இறுதி பாதியில் யுத்தம் தீவிரம் அடைந்த களத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த முன்னாள் பிரதேச சுகாதாரப் பணிப்பாளராக பணியாற் றிய வைத்தியர் துரைராஜா வரதராஜா, இரண்டு வருடங்களுக்கு முன்பு  பிரித்தானியாவில் விசேட கலந்துரயைாடலில் பங்குகொண்டு ஸ்ரீலங்கா அர சாங்கம் ஆயுத படைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கிளஸ்டர் குண்டு தாக்கு தல்களுக்கு மட்டுமன்றி இரசாயன தாக்குதல்களுக்கும் தமிழ் மக்கள் சிக் குண்டதாகத் தெரிவித்துள்ளாா்.

நிலக்கண்ணி வெடிகள் அகற்றுவதில் உலகிலேயே பிரசித்தி பெற்ற ஹெலோ ட்ரஸ்ட் அமைப்பின் சபை உறுப்பினரால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்பட்ட கிளஸ்டர் குண்டுகளின் புகைப்படங்களின் ஆதா ரம் பிரித்தானியாவை மையமாகக் கொண்ட கார்டியன் பத்திரிகையினால் கடந்த 2016 ஜூன் மாதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila